»   »  லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் கேமரா.. ஆக்ஷன்.. வினீத் இப்போ டைரக்டர்!

லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் கேமரா.. ஆக்ஷன்.. வினீத் இப்போ டைரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக மலையாளம் மற்றும் தமிழில் நடித்து வந்த வினீத் இப்போது இயக்குநராகி விட்டார்.

மலையாளத்தில் இளம் நாயகனாக பல படங்களில் நடித்தவர் வினீத். தமிழிலிலும் காதல் தேசம், ஆவாரம் பூ என பல படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி படத்திலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அருமையான பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட. பரதத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவர். நடிகை ஷோபனாவின் உறவினரும் கூட.

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

ஆவாரம் பூ படத்தில் இசைஞானி இளையராஜாதான் உண்மையான ஹீரோ. மனதைப் பிழிந்த இசையை அதில் இளையராஜா கொடுத்திருப்பார். இருப்பினும் அந்த இசையுடன் போட்டி போட்டு வினீத்தும் அருமையாக நடித்திருப்பார்.

காணாமல் போனார்

காணாமல் போனார்

அப்படிப்பட்ட வினீத் நாளடைவில் புதுப் புது நடிகர்களின் வரவால் செல்வாக்கிழந்து போனார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது வினீத் இயக்குநராகியுள்ளாராம்.

ஆயாள் ஞானில்லா

ஆயாள் ஞானில்லா

மலையாளத்தில் ஆயாள் ஞானில்லா (நான் அவன் இல்லை) என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம் வினீத். இப்படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

பாசில் மகன் ஹீரோ

பாசில் மகன் ஹீரோ

பாசில் மகன் பஹத் பாசில் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் திவ்யா பிள்ளை என்பவர் நடித்துள்ளார். குஜராத்தில் செட்டிலான மலையாளி ஒருவர் குறித்த கதையாம் இப்படம். இப்படத்தில் பஹத் பாசில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம்.

இயக்குநராக முதல் படம்

இயக்குநராக முதல் படம்

குஜராத் மற்றும் பெங்களூரில் வைத்து படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளனராம். இதுதான் வினீத்துக்கு இயக்குநராக முதல் படமாகும். ஒரு வடக்கன் வீரகதா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த அனுபவம் கொண்ட வினீத் தற்போது இயக்குநராகியுள்ளார்.

English summary
Famous actor Vineeth Kumar has turned into direction and directing a movie in Malayalam which scripted by the director him self. The film is titled as Ayal Njanalla. Young prominent actor Fahadh Faasil is the hero of this movie and the female lead roles will be done by new face, Divya Pillai, along with famous actress Mrudula Murali.
Please Wait while comments are loading...