Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Bigg Boss Tamil 6 Eviction: ராம் கன்ஃபார்ம்.. இந்த வாரம் வெளியேற போற இன்னொருவர் இவர்தானா?
சென்னை: பிக் பாஸ் நாமினேஷனில் தான் இடம்பெற்ற உடனே இந்த வாரம் எவிக்ட் ஆகிவிடுவேன் என முழு நம்பிக்கையாக ஆருடம் சொல்லி உள்ள ராம் ராமசாமி இந்த வாரம் வெளியேறுவது உறுதி.
ஆனால், கமல் போகும் போதே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என குண்டை தூக்கிப் போட்டுள்ள நிலையில், வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர் யாராக இருக்கும் என ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.
கருத்துக் கணிப்புகளின் படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார் யார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..
டாஸ்க்கும் மொக்க..ப்ரோமோவும் மொக்க..ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க பாஸ்..கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்த வார நாமினேஷன்
கடந்த 2 வாரங்களை போல இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் வைக்காமல் கன்ஃபெஷன் ரூமில் நாமினேட் செய்ய வைத்தார் பிக் பாஸ். ஆனால், அப்போதும் விக்ரமன், ஷிவின் பெயர் எல்லாம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை. வழக்கம் போல நம்ம அசீம், ஆயிஷா, கதிர், ஜனனி, ராம் மற்றும் ஏடிகே இந்த முறை நாமினேட் ஆகி உள்ளனர்.

நாமினேட் ஆகாதவர்கள்
கேப்டன் பதவி பெற்று மணிகண்டன் நாமினேஷனில் இடம்பெறவில்லை. விக்ரமன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை சந்திக்காமல் ஜாலியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். நாமினேட் ஆன நபர்கள் எப்படியாவது பர்ஃபார்ம் செய்ய வேண்டும் என முதல்வன் ரகுவரன் கெட்டப் எல்லாம் போட்டுக் கொண்டு பேச முயற்சி செய்து வருகின்றனர்.

செம சேஃப்
வார வாரம் எப்படியாவது அசீம் அட்ராசிட்டி பண்ணுகிறார் என அவரை நாமினேட் செய்து அனுப்பி விடலாம் என நினைத்து வரும் ஹவுஸ்மேட்ஸுக்கு செம பல்பு கொடுத்து அதிக வாக்குகளுடன் முதல் இடத்திலேயே சேவ் ஆகி வருகிறார் அசீம். இந்த வாரம் டபுள் எவிக்ஷனை கமல் அறிவிக்க காரணம் கூட எப்படியாவது அசீமை சேர்த்து அனுப்புங்க என்பதை மறைமுகமாக சொல்வது போலத்தான் இருந்தது என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மாஸ் காட்டும் கதிரவன்
அமைதியாக எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் வழுக்கிக் கொண்டே விளையாடி வரும் கதிரவனையும் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். நாமினேஷனில் இடம்பெற்ற உடனே மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் பிரபுதேவா பாட்டுக்கு ஆட்டம் போட்டு தனக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்டி ஓட்டுக்களை அள்ளி வருகிறார். இந்த வாரம் அசீம் முதலில் சேவ் ஆவாரா? கதிர் சேவ் ஆவாரா என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

ஜனனி ஆர்மி ஸ்ட்ராங்
குயின்ஸியை தொடர்ந்து ஜனனியையும் எப்படியாவது வெளியே பார்சல் செய்து விடலாம் என ஹவுஸ்மேட்ஸ் நினைத்து நமைனேட் செய்துள்ளனர். ஆனால், அவரது ஆர்மியினர் எப்படியும் எங்க செல்லத்த வெளியே போக விடமாட்டோம் என ஓட்டுக்களை ஜனனிக்கு குத்துங்கடா என குத்தி வருகின்றனர்.

டேஞ்சர் ஜோன்
இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ள ஏடிகே, ஆயிஷா மற்றும் ராம் மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இதில், ஆயிஷா மற்றும் ராமை விட சற்றே அதிக ஓட்டுக்களை அள்ளி ஏடிகே முன்னிலையில் உள்ளார். ஆனால், வார இறுதியில் என்ன ஆகும் என்பது தெரியவில்லை.

இவங்க ரெண்டு பேரு தான்
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கமல் அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆயிஷா மற்றும் ராம் வெளியேறும் நிலையில், குறைவான வாக்குகளுடன் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண் போட்டியாளர், ஒரு பெண் போட்டியாளர் வெளியேற வேண்டும் என்றாலும் இந்த ஜோடி சரியாக உள்ளது. ஆயிஷாவுக்கு ஓட்டு கிடைத்தால் ஏடிகே சிக்குவார் என தெரிகிறது.