»   »  'லைகா புரொடக்ஷன்ஸ் + சூப்பர் ஸ்டார் + ஷங்கர்'.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!

'லைகா புரொடக்ஷன்ஸ் + சூப்பர் ஸ்டார் + ஷங்கர்'.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தை ரஜினி ஒப்புக் கொள்வதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வரும் விஷயம், ஷங்கர் இயக்கத்தில் அவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என்பது.

ஆனால் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். காரணம், அதற்குள் கபாலி படம் தொடங்கிவிட்டார் ரஜினி. இந்தப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது எந்திரன் 2 ஐ அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

மீடியா.. ரசிகர்கள்

மீடியா.. ரசிகர்கள்

ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதாக இல்லை. இந்தப் படம் குறித்து மீடியாவில் வெளியாகும் செய்திகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர். ஒருமுறை ஷங்கரே, 'அவசரப்பட வேண்டாம். நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என்று மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவில் ரஜினி

அமெரிக்காவில் ரஜினி

இந்த நிலையில், எந்திரன் 2-ன் மேக்கப் டெஸ்ட் மற்றும் ஆரம்பப் பணிகளில் பங்கேற் சில தினங்களுக்கு முன் ரஜினி அமெரிக்கா சென்றார். இன்றோ நாளையோ அவர் சென்னை திரும்புகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்தார்.

அர்னால்டுடன் சந்திப்பு

அர்னால்டுடன் சந்திப்பு

எந்திரன் 2-ன் தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன் நடிக்கவிருக்கும் அர்னால்ட் என பலரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

உறுதி செய்தனர்

உறுதி செய்தனர்

இப்போது இந்தப் படத்தை கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தி.

இந்தியாவின் மிகப் பெரிய படம்

இந்தியாவின் மிகப் பெரிய படம்

"லைகா புரொடக்ஷன்ஸ் + சூப்பர் ஸ்டார் + ஷங்கர்... எங்களின் அடுத்த படத்தை இந்தியாவின் மிகப் பெரிய படமாகத் தர தயாராகிவிட்டோம்" என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Ayngaran Karuna Moorthy has confirmed Rajini - Shankar's mega movie Enthiran 2 with Lyca Productions.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil