அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!

ஹைதராபாத் : மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஆக்சன் திரில்லர் திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் இப்போது தெலுங்கில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இதில் நடிகர் பவன்கல்யாண் மற்றும் ராணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் பின் எவ்வாறு மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை மிக சுவாரசியமாக உண்மை தன்மை குறையாமல் காட்டி இருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றதை அடுத்து இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப் பட்டு வருகிறது.

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

 அதிகாரத்தில் இருக்கும் இரண்டு நபர்கள்

அதிகாரத்தில் இருக்கும் இரண்டு நபர்கள்

மலையாள இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் . இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜுமேனன் லீட் ரோலில் நடித்திருப்பார்கள். மலையாளத்தில் வெளியான இத்திரைப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வழக்கமான மலையாள படங்களை விட இப்படத்திற்கு அதிக அளவிலான வரவேற்பு கிடைத்தது. அய்யப்பனும் கோஷியும் வெற்றி பெற்றதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டி போட்டனர். இப்படத்தில் பிரித்விராஜ் போதைக்கு அடிமையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்க பிஜுமேனன் போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருப்பார். இரண்டு வெவ்வேறு அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சினையில் சந்திப்பின் போது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிக அழகாக இந்த படத்தில் காட்டி இருப்பார்கள். மிக சிறிய பிரச்சினை இருவரது ஈகோ காரணமாக எவ்வாறு விஸ்வரூபம் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்தி இருந்தது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சசிகுமார், பார்த்திபன் நடிக்க இருப்பதாக ஒருபுறம் பேச்சுக்கள் அடிபட்டாலும் மறுபுறம் கார்த்தி மற்றும் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை தமிழ் ரீமேக் பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தெலுங்கில் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் பணிகள் விறு விறு வேகத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது. லாக்டவுனுக்குப் பிறகு ஒருவழியாக படப்பிடிப்புகள் நடக்க தொடங்கிய நிலையில் முதல் வேலையாக அய்யப்பனும் கோஷியும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகவும். நடிகர் ராணா பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் நடித்து வருகின்றனர் . இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலானது. பீம்லா நாயக் என்ற கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். இருவரும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தி உள்ளனர்.
சாகர் கே சந்திரா இந்தப் படத்தை இயக்குகிறார். எஸ் தமன் இசையமைக்கிறார்.

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15

சூர்யா தேவர நாகவம்சி கீதா என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகை நித்யா மேனன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . மேலும் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் உருவாவதால் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய சூப்பரான அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தின நாளை முன்னிட்டு அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் காலை 9:45 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் ஒரே திரைப்படத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் உருவாகி உள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சாய் பல்லவி முதலில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் படப்பிடிப்பு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் இப்படத்தில் இருந்து வெளியேற நடிகை நித்யா மேனன் இப்போது ஒப்பந்தமாகி உள்ளார். சித்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் 12வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தை வரும் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் அப்டேட்டால் பவன் கல்யாண் மற்றும் ராணாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X