ஹீரோ பாணியில் அநியாயத்தை தட்டிக் கேட்ட விக்ரமன்... மீண்டும் டார்கெட் செய்து வம்பிழுத்த அசீம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஜிபி முத்து அவராகவே வெளியேறிவிட்ட நிலையில், சாந்தியும் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் அசீம் - விக்ரமன் மோதல் மீண்டும் வலுவெடுத்துள்ளது.

அசீம் – விக்ரமன் மோதல்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இரண்டு வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மகனின் உடல்நிலை காரணமாக ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல் மற்றொரு போட்டியாளரான சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதனிடையே சென்ற வாரம் அதிகமான ரெட் கார்டு வாங்கி அசிங்கப்பட்டார் அசீம். ஆயிஷாவுடன் ஏற்பட்ட மோதலில் அவரை "வாடி போடி" என மரியாதை குறைவாக பேசியதால், ரசிகர்களிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார் அசீம். ஆயிஷாவை அசீம் தரக்குறைவாக பேசியதை விக்ரமன் துணிந்து கேள்விக் கேட்டதால், அவருக்கும் அசீமுக்கும் இடையே தகராறு எழுந்தது.

கமலின் பஞ்சாயத்து
இந்த நிலையில், தான் கடந்த வாரம் கமல் முன்னிலையில் நடைபெற்ற பஞ்சாயத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் அசீம்க்கு ரெட் கார்டு கொடுத்தனர். அப்போது கமலும் அசீமை சாஃப்ட்டாக டீல் செய்து அட்வைஸ் கொடுத்தார். அதன்பிறகு விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் அசீம் மன்னிப்பு கேட்டார். இப்போது அசீமும் ஆயிஷாவும் பகையை மறந்து ஒரே டீமாக விளையாடி வருகின்றனர். ஆனால், விக்ரமன் - அசீம் பகை இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதை கடந்த இரு தினங்களாக பார்க்க முடிகிறது.

பொம்மை டாஸ்க்கில் மோதல்
பிக் பாஸ் வீட்டில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. இதில், அசீம், ஆயிஷா, ஷெரின், மகேஷ்வரி ஆகியோர் ஒரே குழுவாக ஆடி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஷிவின், தனலட்சுமி, ஜனனி, அமுதவாணன் இவர்கள் ஒரு குழுவாக ஆடுகின்றனர். இந்தப் போட்டியில், மொத்தம் 19 பொம்மைகள் இருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்கள் எடுத்துக்கொண்டு அந்த அறையில் வைக்க வேண்டும். இடம் கிடைக்காமல் போகும் பொம்மையில் யார் பெயர் இருக்கிறதோ, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இதில், இரண்டு குழுவினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தனலக்ஷ்மியை தள்ளிவிட்ட அசீம்
இந்தப் போட்டியில் முதலில் தனலக்ஷ்மி, ஜனனி, ஷிவின் மூவரும் சேர்ந்து ஷெரினை ப்ளாக் செய்த போது, மொத்தமாக எல்லோரும் கீழே விழுந்தனர். அதில் ஷெரினுக்கு தலையில் அடிபட்டது. இதனால் தனலக்ஷ்மியிடம் அசீம் சண்டைக்கு சென்றார். மீண்டும் நடந்த போட்டியில் அசல் கோலாறுவை ப்ளாக் செய்த தனலக்ஷ்மியை அசீம் தள்ளிவிட்டு பொம்மையை குடிலுக்குள் கொண்டு வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தனலக்ஷ்மி தன்னை எப்படி தள்ளிவிடலாம் என அசீமிடம் சண்டைக்கு சென்றார்.

தட்டிக் கேட்ட விக்ரமன்
அப்போது தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரமனும் அசீமை தட்டிக் கேட்டார். கையால் தள்ளியது தவறு என அசீமிடம் சீறினார். ஆனால், அசீம் வழக்கம் போல ரொம்பவே இரிட்டேட்டடாக நடந்துகொண்டதோடு விக்ரமனை மோசமாக டீல் செய்தார். எப்போதும் போல அடிக்கடி ஒருமையில் பேசி அவரை பேசவிடாமல் அசீம் மட்டுமே கத்திக் கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே விக்ரமனை டார்கெட் செய்து விளையாடி வரும் அசீம், இந்த முறை இன்னும் வரம்பு மீறிப் பேசியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரமனை தொடர்ந்து அமுதவாணனிடமும் அசீம் எல்லை மீறி பேசினார். இதனால், அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











