மீரா மிதுனாக தன்னை உணர்கிறார் அசீம்.. விக்ரமனுக்கு எதிராக ஜனனியை இப்படியா கொம்பு சீவி விடுவது?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் சிங்கம் என்றும் அசீமை தனக்கு பிடிக்காது என்றும் நிவாஷினி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என நள்ளிரவில் ஜனனியை பிரைன் வாஷ் பண்ணும் அசீமின் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
விக்ரமனுக்கு எதிராக அமுதவாணன் வழக்கு தொடுத்த நிலையில், வக்கீலாக ஆஜரான அசீம், தற்போது ஜனனியை மிட் நைட்டில் தூங்க விடாமல் விக்ரமனுக்கு எதிராக இந்த பாயிண்ட்டை வைத்து வழக்கு கொடு என பேசும் காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது.
அசீம் இப்படியொரு நரியாக இருப்பாரா? என்றும் ஜனனி உண்மையிலேயே ஒரு அம்பு மட்டும் தான் அவருக்கு சொந்தமாக யோசிக்கும் சுய புத்தியே இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

குள்ள நரி
பிக் பாஸ் வீட்டில் குள்ள நரி வேலை பார்த்து வருவது அசீம் தான் என நெட்டிசன்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வசைபாட இன்னொரு காட்சியையும் அசீம் அழகாக உருவாக்கி கொடுத்துள்ளார். ஜனனியிடம் மூளைச்சலவை செய்து விக்ரமனுக்கு எதிராக வழக்கு தொடர சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்.

இரவில் ஜனனியுடன்
ஏற்கனவே அமுதவாணனுக்கு வழக்கறிஞராக விக்ரமனுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி பேசிய அசீம் தற்போது மீண்டும் விக்ரமனை காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் ஜனனியை வைத்து புதிய வழக்கு ஒன்றை கொடுக்கச் சொல்கிறார். அதுவும் இரவில் ஜனனியுடன் தனியாக அமர்ந்து அசீம் பேசும் காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

தமிழ் பிரச்சனை
ஜனனியின் தமிழ் குறித்து அரசு ஆலோசகராக இருந்த விக்ரமன் தப்பாக பேசினார் என்கிற வழக்கை தொடுத்து இலங்கைத் தமிழுக்கு எதிரானவர் விக்ரமன் என்பது போல வழக்கை கொண்டு போகலாம் என அசீம் கொடுக்கும் அட்வைஸ் எல்லாம் அவர் மீது இருந்த கொஞ்ச மரியாதையை கூட கெடுத்து விட்டது என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

தலையாட்டி பொம்மை
அசீம் சொல்ல சொல்ல, ஆம் அப்படித்தான் அவர் என்னை பற்றியும் என் தமிழை பற்றியும் பேசியது ரொம்பவே தப்பு இதை நான் வழக்காக கொடுக்கிறேன் என தலையாட்டி பொம்மை போல அசீம் சொல்ல சொல்ல கேட்கும் கிளிப்பிள்ளையாக மாறிய நிலையில், ஜனனியின் வாக்குகள் சரிந்து போக இதுதான் காரணம் என்றும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

விக்ரமன் தான் டார்கெட்
அசீமின் ஒரே டார்கெட் இந்த வீட்டில் விக்ரமன் மட்டும் தான். அசீமின் வழக்கை வாதாட யாருமே வராத நிலையிலும், விக்ரமனிடம் தன்னுடைய வழக்கை கொடுக்க கூடாது என்பதில் ரொம்பவே குறியாக இருந்தார் அசீம். கடைசியில், அவருக்கு வக்கீல் யாரும் கிடைக்கவில்லையே என ஷிவின் ஆஜராகி வாதாடினார். அப்படியே சீசன் 4ல் ஆரி vs பாலா கேம் போலவே இந்த சீசன் மாறி வருகிறது என நெட்டிசன்கள் ஸ்க்ரிப்ட்டை மாத்துங்கப்பா என கலாய்த்து வருகின்றனர்.

மீரா மிதுனாக உணர்கிறார்
செய்வதை எல்லாம் செய்து விட்டு அசீம் தியானம் செய்யும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் சீசன் 3ல் மீரா மிதுன் பண்ண தியானக் காட்சிகளை ஷேர் செய்து அசீம் தன்னை மீரா மிதுனாக உணர்கிறார் என ட்ரோல் மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











