For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அசீம் என்னோட மருமகனே கிடையாது... அது பொய்: ஆளுர் ஷாநவாஸ் சொன்ன அதிர்ச்சியான உண்மை

  |

  சென்னை: அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
  விக்ரமன், ஷிவின், அசீம் இவர்கள் மூன்று பேர் மட்டுமே பைனல் ரேஸில் உள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் என நாளை தெரிந்துவிடும்.
  இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய சில நாட்களில் ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசிக்கொண்டிருந்த அசீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது தாய் மாமா என பேசியிருந்தார்.
  இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ், அசீம் குறித்து சில அதிர்ச்சிகரமான உண்மைகளை பேசியுள்ளார்.

  டைட்டில் தனக்கு கிடைக்கலைன்னா.. பிக் பாஸையே உழுது விட்ருவாறு உழுது.. அசீமை விளாசிய ஆர்த்தி! டைட்டில் தனக்கு கிடைக்கலைன்னா.. பிக் பாஸையே உழுது விட்ருவாறு உழுது.. அசீமை விளாசிய ஆர்த்தி!

  பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர்

  பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர்

  பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது. பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக ஜிபி முத்துவும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்தனர். இவர்களில் அமுதா, கதிர், மைனா நந்தினி மூவரும் இறுதிப் போட்டி வரை சென்றும் டைட்டிலை வெல்ல முடியாமல் வெளியேறினர். இறுதியாக ஷிவின், விக்ரமன், அசீம் மூவரும் பைனலிஸ்ட்டாக பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

  ஆர்வக் கோளாறு அசீம்

  ஆர்வக் கோளாறு அசீம்

  இந்த சீசனில் மிக முக்கியமான போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அசீம். சீரியல் நடிகரான அசீம் பிக் பாஸ் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடினாலும், பல நேரங்களில் சக போட்டியாளர்களை தரக்குறைவாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கினர். அதனால் அவருக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்தது. முக்கியமாக விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையே நடந்த மோதல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே தான் ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசிக் கொண்டிருந்த அசீம், விக்ரமன் இருக்கும் கட்சியில் தான் எனது மாமா சிட்டிங் எம்.எல்.ஏ, இவரு சாதாரண உறுப்பினர் என அவரை மட்டம் தட்டினார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது.

  உண்மையை சொன்ன ஆளூர் ஷாநவாஸ்

  உண்மையை சொன்ன ஆளூர் ஷாநவாஸ்

  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்ற ஆளூர் ஷாநவாஸை தான் அசீம் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது இந்த சர்ச்சை குறித்து ஆளூர் ஷநவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அசீமும் நானும் ஒரே ஊர் என்பதால் அவருடன் அறிமுகம் உள்ளது. மற்றபடி அவர் எனது மருமகன் கிடையாது. எனக்கு ஒரு தங்கை மட்டும் தான், அக்கா கிடையாது. அக்கா இருந்தால் தான், நான் அசீம்க்கு தாய் மாமாவாக இருக்க முடியும். அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியாது. ஆனாலும் அவர் இப்படி நடந்துகொண்டதை நான் எதிர்பார்க்கவில்லை என சர்சசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  விக்ரமனுக்கு ஆதரவு

  விக்ரமனுக்கு ஆதரவு

  அதேபோல் விக்ரமன் விசிக-வில் இருப்பதால் அவரை நன்றாக தெரியும். அவரது கொள்கையின் வெளிப்பாடு பிக் பாஸ் வீட்டிலும் இருப்பதை பார்க்க முடிகிறது எனக் கூறியுள்ளார். முன்னதாக பிக் பாஸ் டைட்டில் வின்னராக விக்ரமனை தேர்ந்தெடுக்க ஆதரவு கோரி ட்வீட் செய்திருந்தார் ஆளூர் ஷா நவாஸ். "கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம்; கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்!" என்ற தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப, கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க" என ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், அசீம் பொய் சொன்ன வீடியோவையும் ஆளூர் ஷா நவாஸின் விளக்கத்தையும் முன்வைத்து நெட்டிசன்கள் அசீமை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss hosted by Kamal Haasan is approaching its 104th day. Azeem, who has qualified for the finale, used to tell Bigg Boss contestants that MLA Aloor Sha Navas is his uncle. However, Aloor Sha Navas denied it and explained that Azeem is not his son-in-law.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X