Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாயாசம் போடுற அந்த ஆயாவே அசீம் தானா? ஷெரினா, குயின்ஸி இப்போ ஜனனி.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?
சென்னை: இந்த வாரம் ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக (இந்த வாரமாவது) ஜனனி எவிக்ட் ஆகி உள்ள தகவல்கள் பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்த நிலையில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஷெரினாவுக்கு ஆதரவாக அசீம் சப்போர்ட் பண்ணி அப்படி பேசிய நிலையில், அந்த வாரமே அவரை பேக்கப் செய்து வெளியே அனுப்பி விட்டார்கள்.
அதே போலத்தான் இந்த வாரம் ஜனனி வெளியேறுவதற்கும் அசீம் போட்ட பாயாசம் தான் காரணம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
நேற்று
ராம்...இன்று
ஆயிஷா..தப்பித்த
ஜனனி..இனிமேல்
தான்
தரமான
சம்பவம்
லோடிங்!

லெக் தாதா அசீம்
குஷ்புவின் தாலி புதுசு படத்தில் செந்தில் லெக் தாதா எனும் கேரக்டரில் நடித்து இருப்பார். அவர் கால் வைக்கும் இடமெல்லாம் விளங்காமல் போய் விடும். ஆனால், அவருக்கு ஒன்றுமே ஆகாது. அதே போலத்தான் இந்த சீசனில் அசீம் யாருக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறாரோ அல்லது அவர் யாரையெல்லாம் டார்கெட் செய்கிறாரோ அவர்கள் எல்லாம் எவிக்ட் ஆகி வெளியேறுகின்றனர் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஷெரினாவுக்கு குறும்படம்
ஷெரினாவை தள்ளி விட்டது தனலட்சுமி தான் நான் பார்த்தேன் என பார்க்காமலே பொய் சாட்சி சொல்லி ஷெரினாவை உசுப்பேற்றி விட்டே அவரை வீட்டை விட்டு விரட்டியடித்தார் அசீம் என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அசீம் தான் தனக்கு சப்போர்ட்டாக இருந்தார் என ஷெரினா நினைத்துக் கொண்டிருந்தால் பாவம் அவங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

குயின்ஸிக்கு குறி
நாமினேஷன் பண்ணும் போதே குயின்ஸி முகத்தில் குறைவான க்ரீம் அப்பப்பட்டுள்ளதாக பிரச்சனையை கிளப்பி ரசிகர்களை குயின்ஸிக்கு எதிராக திருப்பி விட்டார் அசீம் என்றும் குயின்ஸி அந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமே அசீம் அண்ணாச்சி தான். இந்த சீசன் பிக் பாஸ் கேமையே தாறுமாறாக மாற்றி வருகிறார் அசீம் என அவருக்கு வஞ்சப் புகழ்ச்சி அணியில் பாராட்டுக்களும் குவிகின்றன.

ஜனனிக்கும் பாயாசம்
ஷெரினா, குயின்ஸியை தொடர்ந்து இந்த வாரம் ஜனனி வெளியேறவும் அசீம் தான் காரணம் என்றும் விக்ரமன் கோட்டை தொடவில்லை என்றும் ஜனனி தான் கோட்டை தொட்டார் என்றும் பார்த்தது போலவே பேசி பிரச்சனையை பெரிதாக்கிய நிலையில் தான் ஜனனிக்கு இந்த வாரம் ஓட்டுக்கள் குறைந்து வெளியேற்றப்பட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் துவைத்து தொங்க விட்டு வருகின்றனர்.

உஷாரா இருங்க
அசீமிடம் கொஞ்சம் அல்ல ரொம்பவே உஷாராகவும் எச்சரிக்கையாகவும் போட்டியாளர்கள் இருங்க.. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து பெண் போட்டியாளர்களை திட்டமிட்டு வெளியேற்றி வருகிறார் அசீம் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ரச்சிதா அல்லது மைனா அடுத்த வாரம் வெளியேறுவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.