கமல் அசிங்கப்படுத்தியும் அசீம் எப்படித்தான் சிரிக்கிறாரோ.. அடுத்த வாரமும் அராஜகமும் இருக்குமா?

சென்னை: எப்படியோ ரெட் கார்டு இல்லை என்பது முடிவாகி விட்டது. கமல் கண்டிப்பது போல கண்டித்து விட்டு மக்கள் கையில் தான் உன் எவிக்‌ஷன் நாங்க ரெட் கார்டு கொடுக்க மாட்டோம் என சொன்ன நிலையில், அசீம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சிரித்தது எல்லாம் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

ஐ விட்னஸ் என்றும், யாரு வெஞ்சன்ஸ் உடன் நடந்து கொண்டார் என்பதை பாருங்கள் என குறும்படம் போட்டு வெளுத்து வாங்கி விட்டார் கமல்.

ஷெரினா பஞ்சாயத்தை மட்டும் பேசிய நிலையில், அசீம் தனலட்சுமியை தள்ளிவிட்டது பற்றி இன்னமும் கமல் ஸ்ட்ராங்காக கண்டித்து இருக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

அசீமை விளாசிய கமல்

அசீமை விளாசிய கமல்

அசீம் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் மகனுக்கு நான் நல்ல ரோல் மாடலா இருக்கணும் என டிராமா அழுகை எல்லாம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்க செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு. உங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த எனர்ஜியுடன் சும்மா வச்சி விளாசி விட்டார் கமல்.

தண்டனை இல்லை

தண்டனை இல்லை

தனலட்சுமி, ஷிவின், அமுத வாணன், விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் இந்த வாரம் அசீம் மோசமாக நடந்து கொண்டதுக்கு அவருக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், வெறும் கண்டிப்புடன் கமல் விட்டதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே வருத்தம் அடைந்துள்ளனர்.

பெரிய பிஆர் டீம்

பெரிய பிஆர் டீம்

அசல் கோலாருக்கே மக்கள் ஓட்டு போடாமல் இந்த வாரம் ஓட விட்டுள்ள நிலையில், அசீம் செய்த வேலைக்கு அவருக்கு எப்படி ஓட்டு கிடைத்திருக்கும். ஆனால், அவருக்கு பின்னால் பெரிய பிஆர் டீம் வேலை செய்து வருவது தான் அசீம் இந்த வாரமும் எஸ்கேப் ஆக காரணம் என்கின்றனர்.

சிரித்த அசீம்

சிரித்த அசீம்

அந்த தைரியத்தில் தான் அசீமும் அசால்ட்டாக கமல் அப்படி அசிங்கப்படுத்தும் போது கூட அப்படி சிரித்து பேசினார் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். திருநங்கை போட்டியாளர் என்பதற்காக நான் அப்படி ஆக்‌ஷன் பண்ணல என்றும் சும்மா வெறுப்பேற்றத்தான் பண்ணினேன் என்றும் அசீம் கூறி விட்டு ஷிவின் இடம் மன்னிப்பு கேட்டார்.

வருத்தமே இல்லை

வருத்தமே இல்லை

கடந்த வாரம் அத்தனை போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்து பேசிய நிலையில், தனியாக கேமரா முன்பாக எல்லாம் சென்று இனிமேல் இப்படி நடக்க மாட்டேன் என வருத்தப்பட்ட அளவுக்கு கூட அசீம் இந்த வாரம் வருத்தப்படவில்லை. அதே நேரம் கமல் சத்யா படத்தின் கதையை சொல்லும் போதெல்லாம், ஆரம்பித்து விட்டார் டா என்பது போலவே அசீம் பார்த்த காட்சிகளை போட்டு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அசீம் தான் கன்டென்ட்

அசீம் தான் கன்டென்ட்

அசீமை தவிர கடைசி வரை தனா தள்ளிவிட்டாரா இல்லையா? என்பதை யாருமே பார்க்கவில்லை என எஸ்கேப் ஆகி விட்டனர். ஷெரினாவுக்கே சந்தேகம் இருப்பதாக கூறியதெல்லாம் வேறலெவல் ஹைலைட். இந்நிலையில், அசீம் தான் அடுத்தடுத்த வார பிக் பாஸ் சீசன் 6ஐ ஓட்ட கன்டென்ட் கொடுக்கப் போறவரு என அவருக்கு எந்தவொரு தண்டனையும் கொடுக்காமல் அப்படியே விட்டு விட்டார் கமல் என ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X