Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷிவின் கேம் ரொம்ப பிடிச்சிருக்கு.. பாராட்டிய அசீம்.. ஆனால், அவருக்கு என்ன கிடைச்சது தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் யாரோட பாப்புலாரிட்டி வெளியே அதிகரித்து இருக்கும் என்றும் யாருடைய பாப்புலாரிட்டி குறைந்திருக்கும் என்பதை வெளிப்படுத்த, பச்சை மற்றும் சிகப்பு பெட்டிகள் வைக்கப்பட்டு ஹவுஸ்மேட்களுக்கு சூப்பரான டாஸ்க் ஒன்றை கமல் கொடுத்தார்.
டாஸ்க் ஆரம்பிக்கும் முன்பாக ஆடியன்ஸை பார்த்து கைதட்டி காட்டிக் கொடுத்துடாதீங்க என கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
முதல் ஆளாக வந்த அசீம் ஷிவின் கேம் ரொம்ப பிடிச்சுருக்கு என பாராட்டி ஷிவின் போட்டோவை க்ரீனில் வைத்தார். அதே நேரத்தில் அவருக்கு கிடைத்த விஷயம் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
Bigg
Boss
Tamil
6:
குட்
பை
குயின்ஸி..
இந்த
வாரம்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேறியது
இவர்
தான்!

ஷிவின் தான் டாப்
பிக் பாஸ் வீட்டுப் போட்டியாளர்கள் மத்தியில் ஃபைனல்ஸ் வரை சென்று டைட்டிலை தட்டிச் செல்வார் ஷிவின் என பலரும் ஷிவினுக்கு க்ரீன் கொடுத்து பாராட்டித் தள்ளினர். ஷிவின் கேம் சிறப்பாக இருப்பதாக அசீம் ஆரம்பித்து வைக்க ஏகப்பட்ட போட்டியாளர்கள் அதை வழிமொழிந்தனர். மக்கள் மத்தியிலும் தனக்கு நிச்சயம் நல்ல இடம் கிடைத்து இருக்கும் என ஷிவின் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

விக்ரமனுக்கு அடுத்த இடம்
ஷிவினை தொடர்ந்து அதிக க்ரீன் விக்ரமனுக்கு சக போட்டியாளர்கள் கொடுத்தனர். ஷிவினே விக்ரமனைத் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் இருப்பார் என தேர்வு செய்தார். வீட்டில் இருப்பதை போலவே வெளியேவும் விக்ரமன் சமூக கருத்தோடு செயல்படுவார் என பாராட்டுக்கள் குவிந்தன.

டாப் 3ல் ஏடிகே
அமுதவாணன், ஜனனி, தனலட்சுமிக்கு எல்லாம் கிடைக்காமல் அதிகளவு பச்சை கிட்டத்தட்ட விக்ரமனுக்கு சமமாகவே ஏடிகேவுக்கு ஹவுஸ்மேட்கள் கொடுத்தனர். ஏடிகேவின் மிமிக்ரி திறமை, அவர் பாடும் விதம் என சண்டையை தாண்டி என்டர்டெயின்மென்ட் செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் ஏடிகே என ஹவுஸ்மேட்கள் அவருக்கு க்ரீன் கொடுத்தனர்.

அசீமுக்கு ரெட்
பிக் பாஸ் வீட்டில் அராஜகம் செய்து வரும் அசீமுக்கு மக்கள் ரெட் தான் கொடுப்பார்கள் என ஏகப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் அசீமுக்கு ரெட் கொடுத்து கடைசி இடத்துக்கு அசீமை தள்ளினர். ரச்சிதா, அமுதவாணன், குயின்ஸி உள்ளிட்ட போட்டியாளர்களுக்கும் ரெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அசீமுக்கு கிடைத்தது என்ன
கமல் அமைதி காக்க சொன்ன நிலையில், சைலன்ட்டாக இருந்த ஆடியன்ஸ், அதிகம் ரெட் கிடைத்த நிலையில், வெளியே மக்கள் எல்லாம் அப்படி இழிவா நினைக்க மாட்டாங்க.. எனக்கு ஃபேன்ஸ் இருப்பாங்க என பேசியதுமே ஒட்டுமொத்த அரங்கமே கத்தி கூச்சல் போட்டு கமல்ஹாசனையே காண்டாக்கி விட்டனர். நீங்க பேசும் போது கைதட்ட கூட நான் சொல்லியிருப்பேன் என கமல் சொல்லும் அளவுக்கு அசீமுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆடியன்ஸின் ஆதரவு அதிகரித்துள்ளது.