»   »  சன்னி லியோன் ஆடிய 'பாத்ஷாஹோ' - பாலிவுட்டில் மாஸ் ஓப்பனிங்!

சன்னி லியோன் ஆடிய 'பாத்ஷாஹோ' - பாலிவுட்டில் மாஸ் ஓப்பனிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா, வித்யுத் ஜாம்வால் ஆகியோர் நடித்து நேற்று வெளியான படம் 'பாத்ஷாஹோ'. இந்தப் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சி காலத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் படமான பாத்ஷாஹோவிற்கு செமையான ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் இந்தியா முழுவதும் 2800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

Baadshaho has mass opening in bollywood

படம் வெளியான முதல் நாளிலேயே 12 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் என இந்தப்படத்தின் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வருடத்தில் 'பாகுபலி - 2' தான் மெகா ஓப்பனிங்காக 40 கோடி கலெக்‌ஷனை அள்ளி முதலிடத்தில் நீடிக்கிறது.

Baadshaho has mass opening in bollywood

தொடர்ந்து இதே போல கலெக்‌ஷனை அள்ளினால் 'பாத்ஷாஹோ' பாக்ஸ் ஆபிஸில் இணைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களின் வசூலைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
The movie 'Badshahoo' was released yesterday lead by Ajay Devgn, Imran Haasmi and Iliana. On the first day of release, the movie has collected over Rs 12 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil