»   »  பாகுபலி 2: கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கு மட்டும் 10 வாரங்களை ஒதுக்கிய ராஜமௌலி!

பாகுபலி 2: கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கு மட்டும் 10 வாரங்களை ஒதுக்கிய ராஜமௌலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 10 வாரங்களை படக்குழு ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் பாகுபலி. தற்போது இப்படத்தின் 2 வது பாகத்தினை ராஜமௌலி இயக்கி வருகிறார்.

Baahubali 2: 10 Week Schedule for the Climax Scene

முதல் பாகத்தை ராஜமௌலி ட்விஸ்ட்டுடன் முடித்திருந்ததால் 2 வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை வருகின்ற 13ம் முதல் எடுக்கவிருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளோம்.

பாகுபலி 2 கிளைமாக்ஸ் பகுதிக்கு 10 வாரங்களை ஒதுக்கியுள்ளோம். உண்மையில் இது சவாலானது தான்.ஜூன் 13ம் தேதி பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளோம்'' என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜமௌலி பிலிம் சிட்டியில் படம்பிடிக்கப்படவுள்ளன. சாபு சிரில் மேற்பார்வையில் இதற்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா ஆகியோர் படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் பங்கு பெறுகின்றனர்.இதற்காக அனைவரின் கால்ஷீட்களையும் ராஜமௌலி மொத்தமாக வாங்கியிருக்கிறாராம்.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான விடைகள் இந்தப் பாகத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அபரிமிதமாக உள்ளது.

  English summary
  Director Rajamouli Said ''10 week schedule for the shoot of the climax of Baahubali 2 starting June 13th''.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil