»   »  பாகுபலி 2ம் பாகத்தில் எமோஷன் அதிகமாக இருக்கும்.. கதாப்பாத்திர தன்மை மாறும்: ராஜமவுலி

பாகுபலி 2ம் பாகத்தில் எமோஷன் அதிகமாக இருக்கும்.. கதாப்பாத்திர தன்மை மாறும்: ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூசன்: "பாகுபலியின் 2வது பாகத்தில், முழுக்க காட்சிகளையும், விஷுவல் எஃபெக்டுகளையும் மட்டுமே நாங்கள் நம்பியிருக்க போவதில்லை. 2ம் பாகத்தில், பாகுபலியைவிடவும், எமோஷனல் அதிகம் இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்கள் மாறப்போவதில்லை. ஆனால் அவர்களின் கதாப்பாத்திர தன்மை வித்தியாசமாக இருக்கும்" என்று திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்தார்.

Select City
Buy Baahubali 2: The Conclusion (Hindi) (U/A) Tickets

தென் கொரியாவின் பூசனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலியின், 'பாகுபலி தி பிகினிங்' திரையிடப்பட்டது.


தென்கொரியாவில் வரவேற்பு

தென்கொரியாவில் வரவேற்பு

தென் கொரிய ரசிகர்களும், படத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர். ராஜமவுலியிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் கூட்டம் அலைமோதியது.


விஷுவலை நம்புவதில்லை

விஷுவலை நம்புவதில்லை

அங்கு நிருபர்களிடம் பேசிய ராஜமவுலி கூறியது: பாகுபலியின் போர்க்கள காட்சிகளுக்காகவே, ரசிகர்கள் திரும்ப திரும்ப படம் பார்த்தனர் என்பதை படக்குழு அறிந்துள்ளது. ஆனால், பாகுபலியின் 2வது பாகத்தில், முழுக்க காட்சிகளையும், விஷுவல் எஃபெக்டுகளையும் மட்டுமே நாங்கள் நம்பியிருக்க போவதில்லை.


உணர்ச்சி பொங்கும்

உணர்ச்சி பொங்கும்

2ம் பாகத்தில், பாகுபலியைவிடவும், எமோஷனல் அதிகம் இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்கள் மாறப்போவதில்லை. ஆனால் அவர்களின் கதாப்பாத்திர தன்மை வித்தியாசமாக இருக்கும். முதல் பகுதியில் பார்த்த கேரக்டர்களா இவை என வியக்கும் வகையில் அவற்றின், செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நவம்பரில் சூட்டிங்

நவம்பரில் சூட்டிங்

பாகுபலி 2வது பாகத்தின் 40 சதவீத சூட்டிங் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்ட ஷூட்டிங் நவம்பரில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம், கோடை விடுமுறையின்போது, படம் ரிலீசாக உள்ளது. படத்திற்கு 40 மில்லியன் டாலர் என பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் பார்ட் பெற்ற வெற்றியை தொடர்ந்து பட்ஜெட்டை 50 மில்லியன் டாலராக அதிகரிக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


English summary
Rajamouli says that the first part was merely an introduction to the story proper that will unfold in the conclusion. He is however not relying just on grandeur and visual effects. “We are banking on emotion, the sequel is much more emotional than part one,” says Rajamouli on Baahubali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil