»   »  6 நாட்களில் ரூ. 792 கோடி வசூலித்த 'பாகுபலி 2': ரூ.1000 கோடி எல்லாம் ஜுஜுபி

6 நாட்களில் ரூ. 792 கோடி வசூலித்த 'பாகுபலி 2': ரூ.1000 கோடி எல்லாம் ஜுஜுபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படம் வெளியான ஆறே நாட்களில் உலக அளவில் ரூ. 792 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.


‘Baahubali 2’ collects Rs 792 crore in 6 days

படம் வெளியான அன்று மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்தது. பாகுபலி ரிலீஸான ஆறே நாட்களில் உலக அளவில் ரூ. 792 கோடி வசூலித்துள்ளது. பாகுபலி 2 இந்தி பதிப்பு மட்டும் 6 நாட்களில் ரூ. 375 கோடி வசூல் செய்துள்ளது.


வார நாட்களில் கூட பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவே இல்லாமல் உள்ளது. படம் நிச்சயம் 10 நாட்களில் ரூ. 1000 கோடியை தாண்டிவிடும் என்று நம்பப்படுகிறது.


பாகுபலி 2 படம் ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
SS Rajamouli's magnum opus Baahubali 2 has collected Rs. 792 crore worldwide in just six days of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil