»   »  பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேயும் 'பாகுபலி 2' : இரண்டே நாட்களில் ரூ.200 கோடி வசூல்

பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேயும் 'பாகுபலி 2' : இரண்டே நாட்களில் ரூ.200 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் பல சிக்கல்களுக்கு இடையே வெளியானது. தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

படம் காலை 11 மணிக்கு மேல் தான் ரிலீஸே ஆனது. அதற்குள் சில விஷமிகள் படத்தை இணையதளத்தில் வெளியிட்டனர்.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

யார் என்ன செய்தாலும் பாகுபலி 2 படத்தின் வசூலை மட்டும் யாராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்.

ரூ. 122 கோடி

படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்துள்ளது. இந்தி- ரூ. 41 கோடி, தமிழ்+தெலுங்கு+மலையாளம் = ரூ. 80 கோடி. வரலாறு உருவாகியுள்ளது என்று படத்தை இந்தியில் வெளியிட்ட இயக்குனர் கரண் ஜோஹார் ட்வீட்டியுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

பாகுபலி 2 அமெரிக்காவிலும் பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை ப்ரீவியூ ஷோ மற்றும் வெள்ளிக்கிழமை காட்சிகள் மூலம் அமெரிக்காவில் ரூ. 29.06 கோடி வசூல் செய்துள்ளது.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 சனிக்கிழமை இந்தியாவில் மட்டும் ரூ. 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. சரியான விவரம் விரைவில் வெளியாகும்.

ரூ. 200 கோடி

ரூ. 200 கோடி

பாகுபலி 2 படம் ரிலீஸான இரண்டே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறது.

English summary
Prabhas starrer Baahubali 2 has crossed Rs. 200 crore within two days of its release in India alone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil