»   »  பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக இருக்கும் 'பாகுபலி 2': 3 நாட்களில் அசால்டா ரூ. 540 கோடி வசூல்

பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக இருக்கும் 'பாகுபலி 2': 3 நாட்களில் அசால்டா ரூ. 540 கோடி வசூல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்தது.


இதன் மூலம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்தது பாகுபலி 2.


ரூ. 540 கோடி

ரூ. 540 கோடி

பாகுபலி 2 ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 415 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 125 கோடியும் வசூலித்துள்ளது.


இந்தி

இந்தி

பாகுபலி 2 படம் இந்தியிலும் சக்கை போடு போட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ. 41 கோடியும், சனிக்கிழமை ரூ. 40.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 46.5 கோடியும் என மொத்தம் ரூ. 128 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவலை படத்தை இந்தியில் வெளியிட்ட கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவிலும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபீஸை ஆண்டு வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 425 தியேட்டர்களில் பாகுபலி 2 படம் வெளியானது. அமெரிக்க வீக் எண்ட் பாக்ஸ்ஆபீஸில் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளது பாகுபலி 2.


தமிழ்நாடு

தமிழ்நாடு

பாகுபலி 2 தமிழகத்தில் லேட்டாக ரிலீஸானாலும் முதல் நாளே ரூ. 12 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் முதல் நாளில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது பாகுபலி 2.


English summary
SS Rajamouli's magnum opus Baahubali 2 has crossed Rs. 540 crores worldwide within three days of its grand release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil