»   »  பாக்ஸ் ஆபிசை அலறவைத்த பாகுபலி

பாக்ஸ் ஆபிசை அலறவைத்த பாகுபலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி ஜுரம் இன்னும் குறையவில்லை ரசிகர்களுக்கு, திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கூட்டம் போல மக்கள் அலைமோதுகிறார்கள். படம் தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறது என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் ஒருசிலர் படத்திற்கு எதிரான தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர், என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்கள் கழித்துத் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் ஆன ஒரே திரைப்படம் பாகுபலி தான்.

தொடர்ந்து 1 வாரத்திற்கு பாகுபலி திரையிட்ட இடமெல்லாம், ஹவுஸ்புல் போர்டுகள் தொங்கும் நிலையில் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.

பாகுபலி

பாகுபலி

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,ராணா,சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் பாகுபலி.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்தியாவில் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில், வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்கா, துபாய், கனடா, குவைத் போன்ற நாடுகளிலும் வெளியாகி அங்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

100 ஆண்டுகால இந்திய சினிமாவில்

100 ஆண்டுகால இந்திய சினிமாவில்

100 ஆண்டுகளைக் கடந்த இந்திய சினிமா இதுவரை செய்யாத சாதனையை பாகுபலி செய்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சுமார் 60 கோடிகள். ஆமாம் இதுவரை எந்த இந்தியப் படங்களும் செய்யாத ஒரு சாதனையை பாகுபலி செய்துள்ளது.

2 நாட்களில் 100 கோடியைத் தாண்டிய பாகுபலி

2 நாட்களில் 100 கோடியைத் தாண்டிய பாகுபலி

பாகுபலி படத்தில் அந்த உயரமான நீர்வீழ்ச்சியை பிரபாஸ் தாண்டும்போது ஒரு பிரமிப்பு ஏற்படுமே அதே போன்ற ஒரு பிரமிப்பை, பாகுபலியின் 2 நாட்கள் வசூல் ஏற்படுத்தி உள்ளது. ஆமாம் 2 நாட்களில் 100 கோடியை வசூல் செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது பாகுபலி.

பாகுபலி உலகம் முழுவதும்

பாகுபலி உலகம் முழுவதும்

பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 135 கோடியைத் தாண்டி இருக்கிறது என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த இந்தியப் படமும் தொடாத ஒரு உயரம் ஆகும்.

சாட்டிலைட்+ தியேட்டர் வசூல்

சாட்டிலைட்+ தியேட்டர் வசூல்

பாகுபலி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை மட்டுமே இதுவரை 60 கோடியைத் தொட்டு இருக்கிறது, தமிழில் 8 கோடியும், இந்தியில் 17 கோடியும் விலைபோன பாகுபலி தெலுங்கில் சுமார் 25 கோடிக்கு விலைபோயிருக்கிறது. பாகுபலி திரைப்படத்தின் ஆடியோ உரிமை 3 கோடிக்கு விற்று இருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை 200 கோடியைத் தொட்டு இருக்கிறது பாகுபலி திரைப்படம்.

மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இந்தியர்கள்

மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இந்தியர்கள்

250 கோடியில் எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் முதல் பாகம் இரண்டே நாளில் 135 கோடியைத் தாண்டி இருக்கிறது, இதன் மூலம் ஹாலிவுட் மற்றும் பிறநாட்டுத் திரைப்படங்களின் தயாரிப்பு, வர்த்தகம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல இந்தியப் படங்கள் என்று உலகிற்கு ஒருமுறை தெளிவாக எடுத்து உரைத்துள்ளது பாகுபலி.

English summary
Made on a budget of 250 crore, the Prabhas, Rana Daggubati, Tamannaah, Anushka Shetty starrer has set a new benchmark in the history of Indian cinema."Baahubali - the Beginning" has grossed 135 crore at the worldwide box office in two days

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil