»   »  பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் 'பாகுபலி 2': மிரண்டு போய் கிடக்கும் பிரமாண்ட பாலிவுட்

பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் 'பாகுபலி 2': மிரண்டு போய் கிடக்கும் பிரமாண்ட பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படம் ரிலீஸான 7 நாட்களில் ரூ. 860 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.


Baahubali 2 earns 860 Cr. in just 7 days

படம் ரிலீஸான அன்று ரூ. 121 கோடியும், இரண்டாவது நாள் ரூ.200 கோடிக்கும் மேலும் வசூலித்தது. இந்நிலையில் 7 நாட்களில் உலக அளவில் ரூ. 860 கோடி வசூல் செய்துள்ளது பாகுபலி 2.


இந்தியில் கான்களின் படங்களை விட பாகுபலி 2 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மிரண்டு போயுள்ளனர்.


அமெரிக்காவிலும் பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prabhas starrer Baahubali 2 has collected Rs. 860 crore at worldwide box office in seven days of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil