»   »  பாகுபலி 2 பற்றி செய்தி வெளியிட்ட போர்ப்ஸ்: அப்படி என்ன செய்தி?

பாகுபலி 2 பற்றி செய்தி வெளியிட்ட போர்ப்ஸ்: அப்படி என்ன செய்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை பாகுபலி 2 படம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

பாகுபலி 2 படம் இந்தியா மட்டும் அல்ல அமெரிக்காவிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. பாகுபலி 2 படம் ஹாலிவுட்காரர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை பாகுபலி 2 பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது,


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படம் இந்திய பாக்ஸ் ஆபீஸை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. அமிதாப் பச்சனின் சர்கார் 3 மற்றும் ரொமான்டிக் காமெடி படமான மேரி பியாரி பிந்து ஆகிய இந்தி படங்களால் பாகுபலியுடன் போட்டி போட முடியவில்லை.
தங்கல்

தங்கல்

பாகுபலி 2 படத்தை அடுத்து உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆமீர் கானின் தங்கல் பெற்றுள்ளது. சீனா மற்றும் தைவானில் தங்கல் அமோக வசூல் செய்துள்ளது.


சீனா

சீனா

நிதேஷ் திவாரி இயக்க்ததில் ஆமீர் கான், சாக்ஷி தன்வார், பாத்திமா சனா சேக், ஜைரா வாசிம் மற்றும் சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்த தங்கல் படம் சீனாவில் அதிகம் வசூல் செய்த இந்திய படம்.


தைவான்

தைவான்

தங்கல் படம் சீனாவில் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி 2 படத்தின் வசூலை முந்தியுள்ளது. தைவானிலும் தங்கல் தான் வசூலில் முன்னிலை வகித்து வருகிறது.


English summary
Forbes has written about SS Rajamouli's magnum opus Baahubali 2 and its world wide collection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil