»   »  தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்!

தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பாகுபலி-2 படம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தீர்ந்ததால் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. ரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.


கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


பாகுபலி-2 இன்று ரிலீஸ்

பாகுபலி-2 இன்று ரிலீஸ்

இந்நிலையில் பாகுபலி கன்குளுஷன் என்ற இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.


டிக்கெட் முன்பதிவு

டிக்கெட் முன்பதிவு

இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். தமிழகத்தில் இன்று(ஏப்.,28) பாகுபலி-2 வெளியாகவிருந்தது.


பணப் பிரச்சனையால் சிக்கல்

பணப் பிரச்சனையால் சிக்கல்

இந்நிலையில், பட விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விநியோகிஸ்தர்கள் பாக்கி வைத்திருப்பதால், கியூப் மூலம் படத்தை பதிவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.


தெலுங்கில் வெளியானது

தெலுங்கில் வெளியானது

இதனால் காலை 8 மணிக்கு காட்சிகள் வெளியாகவில்லை. ஆனால் தமிழில் வெளியாகாதபோதும், சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி-2 படம் வெளியானது.


650 தியேட்டர்களில் ரிலீஸ்

650 தியேட்டர்களில் ரிலீஸ்

இதைத்தொடர்ந்து 9 மணியளவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்டட பிரச்சனை தீர்ந்ததால் தமிழில் பாகுபலி-2 படம் ரிலீசாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் தமிழில் பாகுபலி-2 படம் வெளியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Baahubali -2 is not released in Tamilnadu due to money problem between the producer and distributers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil