»   »  தமிழகத்தில் 'பாகுபலி 2' காலை காட்சிகள் ரத்து: ரசிகர்கள் அதிருப்தி

தமிழகத்தில் 'பாகுபலி 2' காலை காட்சிகள் ரத்து: ரசிகர்கள் அதிருப்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பாகுபலி 2 காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபாஸ், அனுஷ்காவை வைத்து ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழகத்தில் ப்ரீமியர் ஷோக்களுக்கு ஏற்பாடு செய்யாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.


Baahubali 2 morning shows cancelled in Tamil Nadu

இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் காலையில் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிருப்தியே மிச்சம். காலை 5 மணி மற்றும் 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


காலை 11 மணிக்கு தான் பாகுபலி 2 தமிழகத்தில் ரிலீஸாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஹைதராபாத், மங்களூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் பாகுபலி தமிழ் பதிப்பு ஸ்பெஷல் ஷோக்கள் நேற்று நடந்தன.


தயாரிப்பாளருக்கும், தமிழக வினியோகஸ்தருக்கும் இடையேயான பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Fans are extremely disappointed as morning shows of magnum opus Baahubali 2 have got cancelled in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil