»   »  ரிலீஸாவதற்கு முன்பே வசூலில் 'கில்லி'யான பாகுபலி 2

ரிலீஸாவதற்கு முன்பே வசூலில் 'கில்லி'யான பாகுபலி 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 43 கோடிக்கு போயுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூல் செய்தது. உலக சினிமாவே பாகுபலியை பார்த்து மிரண்டது.

Baahubali 2 North America theatrical rights sold for Rs. 43 crore

இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது.

படத்தின் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ.43 கோடிக்கு போயுள்ளது. அமெரிக்காவில் ஒரு இந்திய படத்தின் தியேட்டர் உரிமை இவ்வளவு தொகைக்கு போயுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

வட அமெரிக்காவில் உள்ள கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் பாகுபலி 2 படத்தை 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறது.

    English summary
    SS Rajamouli's Baahubali 2's theatrical rights for North America has been sold for Rs. 43 crore.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil