»   »  பாலிவுட்டை மிரள வைத்த பாகுபலி 2 இந்தி வசூல்... எவ்ளோன்னு தெரியுமா?

பாலிவுட்டை மிரள வைத்த பாகுபலி 2 இந்தி வசூல்... எவ்ளோன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமௌலி தந்த பிரமாண்ட திரைக் கற்பனையான பாகுபலி 2 படம் இந்தியில் மட்டுமே ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

பாகுபலி 2 படம் இந்திய சினிமாவிலேயே எந்தப் படமும் செய்திராத பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது.


Baahubali 2 officially croses Rs 500 cr in Hindi

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் கடந்த மாதம் வெளியான பாகுபலி 2, உலகெங்கும் வசூலில் கொடி கட்டிப் பறக்கிறது. வெளியான அனைத்து மொழிகளிலும் பாகுபலியே நம்பர் ஒன். இதுவரை அனைத்து மொழிகளிலும் உலகெங்கும் ரூ 2000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, பாகுபலி 2 இந்தியில் மட்டும் ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புது சாதனைப் படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்தியில் இந்தப் படம் கிட்டத்தட்ட டப்பிங்தான். சில காட்சிகள் தவிர மீதி அனைத்தும் டப்பிங்தான். ஒரு தென்னிந்திய மொழிப் படம், அதுவும் டப்பிங் படம் இந்தியில் இத்தனை கோடிகளைக் குவித்திருப்பது பாலிவுட்டை மிரள வைத்துள்ளது.

English summary
Rajamouli's epic drama 'Baahubali 2' has become the first film to cross Rs 500 Cr in a single language in India.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil