»   »  தீயாக பரவிய பாகுபலி 2 போஸ்டர்: காரணம் அனுஷ்கா மீதான சந்தேகம்?

தீயாக பரவிய பாகுபலி 2 போஸ்டர்: காரணம் அனுஷ்கா மீதான சந்தேகம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 போஸ்டர் வெளியாகிய வேகத்தில் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் போஸ்டரில் உள்ள அனுஷ்கா பற்றி பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படமான பாகுபலியின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியானது.

போஸ்டர்

போஸ்டர்

பாகுபலி 2 போஸ்டரில் பிரபாஸும், அனுஷ்காவும் வில், அம்புடன் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளனர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு அதை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

வைரல்

வைரல்

பாகுபலி 2 போஸ்டர் வெளியாகிய சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அனுஷ்கா பற்றி ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

அனுஷ்கா

அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டிய அனுஷ்கா இன்னும் ஒல்லியாக முடியாமல் தவிக்கிறார். அவரின் எடை பிரச்சனை காரணமாக பாகுபலி படப்பிடிப்பு கூட பாதிக்கப்பட்டது.

எடை

எடை

அனுஷ்காவை உடல் எடையை குறைக்குமாறு ராஜமவுலி கறாராக கூறினார். அவர் எடையை குறைத்தபோதிலும் தற்போதும் பூசினாற் போன்று உள்ளார். பாகுபலி படத்தில் இருந்தது போன்று ஒல்லியாக இல்லை.

போட்டோஷாப்பா?

போட்டோஷாப்பா?

போஸ்டரில் அனுஷ்கா சற்று ஒல்லியாகவே உள்ளார். இந்த போஸ்டருக்கு அனுஷ்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே போஸ் கொடுத்திருந்தால் அது ஓகே. இல்லை என்றால் நிச்சயம் போட்டோஷாப் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

English summary
Though Anushka is struggling to lose weight, she looks slim in Baahubali 2 poster that raises the doubt whether it is photoshopped.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil