»   »  ரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்ரெய்லர் இதோ!

ரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்ரெய்லர் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'பாகுபலி 2' படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்ற திரைப்படம் 'பாகுபலி 2'. 'பாகுபலி -2' படம் முதல்முறையாக ரூபாய் 1000 கோடியை வசூலித்து இந்தியப் படங்களில் புது மைல்கல்லைத் தொடங்கி வைத்தது.

Baahubali 2 russian dubbing trailer

பாகுபலி -2 படம் இதுவரை இந்திய வசூலில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகி வருகிறது. இந்தப் படம் ரஷ்ய மொழியிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ரஷ்ய மொழியில் பாகுபலி 2 படம் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் வரும் டிசம்பர் 29-ம் தேதி ஜப்பானிலும் வெளியாகிறது.

English summary
Prabhas, Anushka shetty, Raana, Tamannah, Ramya Krishnan, Sathyaraj and many other actors in 'Baahubali 2' directed by S.S.Rajamouli. 'Baahubali 2' was dubbed also in Russai language. Recently, 'baahubali 2' film's trailer released in Russai language. 'Baahubali 2' will be released on December 29 in Japan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X