»   »  பாகுபலி 2... சேலத்தில் உண்மை வசூல் நிலவரம் என்ன? விநியோகஸ்தர் விளக்கம்!

பாகுபலி 2... சேலத்தில் உண்மை வசூல் நிலவரம் என்ன? விநியோகஸ்தர் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி படம் உலகெல்லாம் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் போது, சேலம் ஏரியாவில் நஷ்டம் என தியேட்டர்களில் கூறப்படுவதாக நாம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

[Read This: பாகுபலி 2 - சேலம் ஏரியாவில் நஷ்டமாம்.. எப்படி தெரியுமா? ]

இந்தக் கட்டுரை வெளியான பிறகு, சேலம் ஏரியா விநியோகஸ்தர் 7 ஜி சிவா இன்று நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.

Baahubali 2 Salem collection details

கட்டுரையில் வந்த தகவல்கள் சில தவறானவை என்று கூறிய அவர், "பாகுபலி 2 சேலம் ஏரியாவில் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது. சேலம் ஏரியா உரிமை ரூ 4.5 கோடிக்குதான் வாங்கப்பட்டது. 7 கோடிக்கு அல்ல. கடந்த 5 நாட்களில் 4.79 கோடி மொத்த (gross) வசூலைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் எந்த ஏரியாவிலும் இந்த வசூல் இல்லை. கோவை, திருச்சி ஏரியாக்களில் இன்னும் Recovery கூட ஆகவில்லை.

ரூ 6 கோடிக்கு வாங்கப்பட்ட திருச்சி ஏரியாவில் இதுவரை 4.39 கோடிதான் கலெக்ஷன் ஆகியுள்ளது. சேலம் ஏரியாவைப் பொறுத்தவரை படம் வெளியிட்ட அத்தனை அரங்குகளிலும் நல்ல வசூல். விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என அனைவருக்குமே லாபம்தான்," என்றார்.

English summary
According to Salem Baahubali distributor 7 G Siva, the movie has collected Rs 4.79 cr groo in the area.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil