»   »  'பாகுபலி 2' காட்சி மீண்டும் லீக்: ராஜமவுலிக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளதே!

'பாகுபலி 2' காட்சி மீண்டும் லீக்: ராஜமவுலிக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்காட்சி வீடியோ இணையதளத்தில் லீக்காகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.


முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆசையில் பல ரசிகர்கள் டிக்கெட் புக் செய்துள்ளனர்.


லீக்

லீக்

படம் ரிலீஸாக உள்ள நிலையில் பிரபாஸ், ராணா வரும் காட்சி இணையதளத்தில் லீக்கானது. 45 வினாடிகள் ஓடிய அந்த வீடியோவில் ராணா மன்னராகும் காட்சி இருந்தது. ப்ரீவியூ ஷோவில் இருந்து காட்சி லீக்கானதாக கூறப்பட்டது.


வீடியோ

வீடியோ

லீக்கான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஆனால் தற்போது அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஷோபு விளக்கம் அளித்துள்ளார்.


இல்லை

பல நாடுகளில் சென்சார் போர்டுகளை தவிர வேறு யாருக்காகவும் பாகுபலி 2 படம் இதுவரை திரையிடப்படவில்லை என்று ஷோபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


படக்குழு

படக்குழு

முன்னதாக படக்குழுவை சேர்ந்த ஒருவரே காட்சியை லீக் செய்தார். வீடியோவை லீக் செய்த கிராபிக் டிசைனரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
45 seconds video of Baahubali 2 has got leaked on social media days ahead of its grand release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil