»   »  பாகுபலி 2... யம்மாடி... 21 நாட்களில் 1500 கோடி!

பாகுபலி 2... யம்மாடி... 21 நாட்களில் 1500 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2 வெளியான போது இருந்த பிரமிப்பும், ஆச்சரியமும் இப்போது மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் குறைந்து வந்தாலும், இன்னுமும் கணிசமான கூட்டம் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் வெளியான 21 நாட்களிலேயே ரூ.1500 கோடி வசூலைத் தாண்டி, பெரும் சாதனைப் படைத்துள்ளது.


Baahubali 2 sets another milestone in BO

'பாகுபலி 2' படம் மொழிகள், எல்லைகள் கடந்து மக்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் பெரும்பகுதி தெலுங்கில்தான் உள்ளது. மற்ற மொழிகளில் டப்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு குறையாகவே யாருக்கும் தெரியவில்லை.


உலகளவில் மொத்த வசூலில் ரூ.1500 கோடியை கடந்திருக்கிறது 'பாகுபலி 2'. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. மேலும், ரூ.1500 கோடியை கடந்ததைக் குறிப்பிடும் விதமாக ரம்யாகிருஷ்ணன் மற்றும் அனுஷ்கா அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


தமிழில் கடந்த 7 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ரஜினியின் எந்திரன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது 'பாகுபலி 2'.


இப்போதும் வார நாட்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவும், வார இறுதிநாட்களில் கூட்டம் அதிகமாகவும் இருப்பதால் கண்டிப்பாக ரூ.2000 கோடியைத் தொடும் என்று பாக்ஸ் ஆபீஸ் கணித்துள்ளது.

English summary
Baahubali 2 is set a new bench mark in Box Office with Rs 1500 cr collection worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil