»   »  பாகுபலி 2 : தமிழ் 'சாட்டிலைட் ரைட்ஸ்' 54 கோடிகளுக்கு விலைபோனதா?

பாகுபலி 2 : தமிழ் 'சாட்டிலைட் ரைட்ஸ்' 54 கோடிகளுக்கு விலைபோனதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பாகுபலி 2' படத்தின் தமிழ் சாட்டிலைட் ரைட்ஸ் சுமார் 54 கோடிகளுக்கு விலை போயிருப்பதாக, டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

பிரபாஸ், அனுஷ்கா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் 'பாகுபலி'. உலகளவில் இப்படம் 600 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

Baahubali 2 Tamil Satellite Rights Sold

தற்போது அதன் 2 வது பாகத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'பாகுபலி 2' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் வெளியாவதற்கு இன்னும் 9 மாதங்கள் இருந்தாலும், படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்களுக்கான உரிமைகளுக்கு இப்போதே பெரும்போட்டி துவங்கி விட்டது.

முதற்கட்டமாக இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஆடியோ உரிமை சுமார் 54 கோடிகளுக்கு விலை போயிருக்கிறதாம். யார் வாங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தெலுங்கில் மா டிவி 25 கோடிகள் கொடுத்து 'பாகுபலி'யை வாங்கினாலும், தமிழ் மற்றும் இந்தி சாட்டிலைட் ரைட்ஸ் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.

'பாகுபலி 2'வுக்கு இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தற்போது இப்படத்தின் விநியோக மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ்களுக்காக பெரிய யுத்தமே நடந்து வருகிறதாம்.

இதனால் முன் வெளியீட்டு வணிகத்தில் இப்படம் இந்தியளவில் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sources Said Baahubali 2 Tamil Satellite Sold for 54 Crores.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil