»   »  பாகுபலி 2 ட்ரெய்லர்: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் வியூஸ் எவ்வளவு தெரியுமா?

பாகுபலி 2 ட்ரெய்லர்: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் வியூஸ் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு

தெலுங்கு

பாகுபலி 2 ட்ரெய்லரின் தெலுங்கு பதிப்பு வெளியான 6 மணிநேரத்தில் 76 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் பாகுபலி 2 கபாலி பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

தமிழ்

தமிழ்

பாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லரை இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதே வேகத்தில் சென்றால் பாகுபலி ட்ரெய்லர் பல சாதனைகளை படைக்கும்.

மலையாளம், இந்தி

மலையாளம், இந்தி

பாகுபலி 2 மலையாளம் பதிப்பு ட்ரெய்லரை இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ட்ரெய்லரின் இந்தி பதிப்பை 36 லட்சத்து 53 ஆயிரம் பார்த்துள்ளனர்.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

பாகுபலி 2 ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் பெரிதா, டோலிவுட் பெரிதா என்று ஒரு கோஷ்டி இணையதளத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

English summary
Prabhas starrer Baahubali 2 trailer has been received well by Tamil, Telugu, Hindi and Malayalam speaking fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil