»   »  5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2

5 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: கபாலியை ஓரங்கட்டிய பாகுபலி 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பாகுபலி 2 பட ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிடும் முன்பே தமிழ் பதிப்பு மட்டும் இணையதளத்தில் கசிந்தது. இதையடுத்து படக்குழுவினர் அவசர அவசரமாக அனைத்து மொழி ட்ரெய்லர்களையும் வெளியிட்டனர்.

ட்ரெய்லரை பார்ப்பவர்கள் எல்லாம் அதை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை யூடியூபில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாகுபலி 2 ட்ரெய்லரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.

கபாலி

கபாலி

முன்னதாக சூப்பர் ஸ்டாரின் கபாலி பட டீஸர் வெளியான 22 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேர் பார்த்தது தான் சாதனையாக இருந்தது. கபாலி சாதனையை பார்த்து அனைவரும் வியந்தனர்.

பாகுபலி 2

பாகுபலி 2

கபாலி பட டீஸர் சாதனையை பாகுபலி 2 ட்ரெய்லர் முறியடித்துவிட்டு புதிய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு இந்திய படத்தின் ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்திருப்பது இது தான் முதல் முறை ஆகும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பாகுபலி 2 ட்ரெய்லர் படைத்துள்ள சாதனையால் ஏற்கனவே பாகுபலி 2 குறித்து இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prabhas starrer Baahubali 2 trailer sets a new record by getting 5 million views within 5 hours of its release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil