»   »  பாகுபலி: 5 நாட்களில் 265 கோடியை வசூலித்து புதிய சாதனை

பாகுபலி: 5 நாட்களில் 265 கோடியை வசூலித்து புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி என்னும் வார்த்தைக்கு வலிமையான தோள்கள் என்று அர்த்தமாம், அதே போன்று வசூலிலும் தொடர்ந்து வலிமை காட்டி பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது பாகுபலி படம்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி தொடர்ந்து இந்தியா முழுவதும், பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியா தவிர மற்ற நாடுகளிலும் திரையிட்ட இடமெல்லாம் வசூல் சாதனை செய்து வருகிறது படம்.

படம் வெளிவந்து இன்றோடு 6 நாட்கள் ஆகின்றன இதுவரை சுமார் 215 கோடியை வசூலித்து வசூலில் ஒரு புதிய வரலாறைப் படைத்து இருக்கிறது படம். படத்தின் மொத்த பட்ஜெட்டையும் படம் வசூலித்து விட்டது என்று கூறுகிறார்கள்.

பாகுபலி இதுவரை வசூலித்த தொகை மற்றும் படத்தின் மொத்த வசூல் நிலவரங்களை இங்கு பார்ப்போம்.

பாகுபலி

பாகுபலி

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் ஏராளமான நட்சத்திரங்களின், நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பாகுபலி. முதல் நாளில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அனைத்து இந்தியப் படங்களின் வசூல் ரெக்கார்டையும் முறியடித்தது.

வசூல் சூறாவளி

வசூல் சூறாவளி

தொடர்ந்து இந்தியா மற்றும் உலகநாடுகள் எனத் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது படம். பாகுபலி வெளியான 4 தினங்களிலேயே சுமார் 190 கோடியை வசூலித்து சாதனை செய்தது, வேறு எந்தப் படங்களும் செய்யாத சாதனை இது.

ஹிந்தியில் பாகுபலி

ஹிந்தி மொழியில் இப்படத்தை கரண் ஜோஹர் வாங்கி வெளியிட்டார், சுமார் 1500 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியானது. இதுவரை சுமார் 28.45 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது. தென்னிந்திய திரைப்படம் ஒன்று ஹிந்தி மொழியில் இந்த அளவு வசூல் செய்வது இதுவே முதல் முறை.

சாட்டிலைட் உரிமை

சாட்டிலைட் உரிமை

பாகுபலி படத்தின் சாட்டிலைட் உரிமை தமிழ் 8 கோடி, தெலுங்கு 25 கோடி, ஹிந்தி 17 கோடி, மொத்தம் 50 கோடி. இதுவரை எந்தத் தென்னிந்தியத் திரைப்படமும் ஏன் எந்த இந்தியத் திரைப்படமும் இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாள் முடிவில்

5 நாள் முடிவில்

பாகுபலி திரைப்படம் மொத்தம் 5 நாட்கள் முடிவில் இதுவரை சுமார் 215 கோடியை வசூலித்து சாதனை புரிந்து இருக்கிறது. எந்த இந்தியத் திரைப்படமும் இதுவரை கனவிலும் தொடாத உயரம் இது.

பாகுபலி மொத்த வருமானம்

பாகுபலி மொத்த வருமானம்

5 நாள் முடிவில் 215 கோடி + சாட்டிலைட் உரிமை 50 கோடி = 265 கோடி. பாகுபலி படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி அதில் போட்ட பணத்தை விட அதிகமாகவே படம் வசூலித்து விட்டது.

500 கோடியைத் தாண்டுமா?

500 கோடியைத் தாண்டுமா?

இன்னும் ஒருவாரம் இதே போன்று ஓடினால் படம் 500 கோடியைத் தாண்டிவிடும் என்று, திரையுலகினர் கூறுகின்றனர். படம் 500 கோடியைத் தாண்டினால் இந்திய சினிமாவில் இந்த சாதனை ஒரு புதிய வரலாறையேப் படைத்து விடும். 500 கோடியை பாகுபலி தாண்டுமா?பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Baahubali Movie Now Crossed 215 Crores, in Box Office.
Please Wait while comments are loading...