»   »  பாகுபலி வசூலை ஆந்திரத் தலைநகர் கட்டுமானச் செலவுக்குக் கொடுக்க திட்டம்

பாகுபலி வசூலை ஆந்திரத் தலைநகர் கட்டுமானச் செலவுக்குக் கொடுக்க திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் ஸ்பெஷல் ஷோக்களை நடத்தி அதில் கிடைக்கும் வசூலை ஆந்திர மாநில புதிய தலைநகர் அமைக்கும் பணிக்குக் கொடுக்க ஆந்திர மாநில விநியோகஸ்தர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

அவரது பெயர் சாய் கோரபட்டி. இவர் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்தில் பாகுபலி திரையிடும் உரிமையை இவர்தான் வாங்கியுள்ளார்.


இந்த நிலையில் இந்தப் படத்தை வைத்து ஒரு வித்தியாசமான ஐடியாவை அவர் தீட்டியுள்ளார்.


விசேஷக் காட்சி...

விசேஷக் காட்சி...

விஜயவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள தியேட்டர்களில் இவர் பாகுபலி படத்தின் விசேஷக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.


நிதி திரட்டும் நிகழ்ச்சி...

நிதி திரட்டும் நிகழ்ச்சி...

இந்த விசேஷ காட்சிகளை புதிய தலைநகருக்கான கட்டுமானப் பணிகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இவர் அறிவித்துள்ளார்.


தலைநகர் கட்டுமானப் பணி...

தலைநகர் கட்டுமானப் பணி...

இந்தப் பகுதி தியேட்டர்களில் போடப்படும் பாகுபலி படத்திற்கு திரண்டு வரும் வசூலை அப்படியே புதிய தலைநகர கட்டுமானப் பணிக்கு கொடுக்கப் போகிறாராம் கோரபட்டி.


அமராவதி நகர்...

அமராவதி நகர்...

ஆந்திர அரசிடம் இந்த நிதியை அவர் கொடுக்கவுள்ளாராம். ஆந்திர மாநிலத்தின்ன் புதிய தலைநகர் அமராவதி நகரில் அமைக்கப்படுகிறது என்பது நினைவிருக்கலாம்.


ஜூலை 9ம் தேதி...

ஜூலை 9ம் தேதி...

ஜூலை 10ம் தேதி பாகுபலி திரைக்கு வருகிறது. எனவே ஜூலை 9ம் தேதி சிறப்புக் காட்சிகளை திரையிடவுள்ளார் கோரபட்டி.
English summary
Baahubali's distribution rights for Krishna district were bagged by Eega producer Sai Korrapati and the tasteful producer has come up with a thoughtful idea for the film's premier shows. The producer is reportedly in plans to turn the premier shows of Baahubali in and around Vijayawada, in to fund raising shows. The money collected with these special premiers will be donated to Andhra Pradesh government, for building their new capital Amaravathi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil