»   »  பாகுபலிக்கு ரூ 1000 கோடி... பாப்கார்னுக்கு...??

பாகுபலிக்கு ரூ 1000 கோடி... பாப்கார்னுக்கு...??

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம்... அதாவது எண்பது, தொன்னூறுகள் ஆரம்பம் வரை கிராமத்து தியேட்டர்களில், டூரிங் கொட்டகைகளில் படங்களின் இடைவேளைகளில் தட்டில் கொண்டு வந்து முறுக்கு விற்பார்கள். அதிகபட்சம் 1 ரூபாய். வெளியே கேன்டீனில் சமோசா, க்ரீம் பன், பழம், மிட்டாய், ஐஸ் அல்லது ஐஸ் க்ரீம்களும் கிடைக்கும். அதிகபட்சம் 5 ரூபாய்க்குள் முடிந்துவிடும் தின்பண்ட செலவு. பலர் இதையெல்லாம் வாங்கக் கூட மாட்டார்கள். குடும்பமாகச் செல்பவர்கள் வீட்டிலிருந்தே தண்ணீர், தின்பண்டங்களை எடுத்துச் செல்வதும் உண்டு. அப்போது அதற்கெல்லாம் தடை இல்லை. நகரத்து அரங்குகளில் பாப்கார்ன் கிடைக்கும். குளிர்பானங்களும் கிடைக்கும். எல்லாம் பத்து ரூபாய்க்குள் முடிந்துவிடும். கேர்ள்ஃப்ரண்ட் கூட வந்தால் ஒரு 50 ரூபாய் ஆகலாம். அவ்வளவுதான்.

ஆனால் இன்றைய சூழல் வேறு. படம் எப்படி இருந்தாலும், இடை வேளைகளில் கண்டிப்பாக நொறுக்குத் தீனி வாங்கியே தீர வேண்டும் என்ற மனோபாவம் வந்துவிட்டது. குடும்பத்துடன் செல்பவர்கள் கட்டாயம் தியேட்டரில் விற்பதைத்தான் வாங்க வேண்டும். தண்ணீர் கூட எடுத்து வர அனுமதியில்லை என்ற நிலை.


Baahubali collects morethan 1000 cr through popcorn sales!

தியேட்டர்களில் நல்ல படம் போட்டால் கூட்டம் அடித்துப் பிடித்து டிக்கெட் எடுக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ 100 அல்லது 120 என்றாலும், பார்க்கிங் மற்றும் பாப்கார்ன் - குளிர்பானங்களுக்கு கொடுக்கும் கட்டணம் குறைந்தது ஒரு நபருக்கு 300ஐத் தாண்டுகிறது.


கிராமப்புறங்களில் இப்போது திரையரங்குகள் / டூரிங் கொட்டகைகள் இல்லை. எங்கோ ஓரிரு ஒற்றைத் திரை அரங்குகள் சுமாரான கண்டிஷனில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அங்கும் கூட டிக்கெட் விலையை விட தின்பண்டங்கள் விலை பல மடங்கு அதிகம். காரணம். இதுபோன்ற தியேட்டர்கள் பெரிதும் நம்பியிருப்பது இந்த பாப்கார்ன் விற்பனையைத்தான்.


ரஜினி படங்கள் வெளியாகும்போது, ஒவ்வொரு அரங்கிலும் டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாயை விட, தின்பண்டங்கள் விற்பனை மூலம் கிடைக்கிற வருவாய் அதிகம். அடுத்து இப்போது பாகுபலி.


இந்தப் படம் டிக்கெட் விற்பனை மூலம் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. ஆனால் இதைவிட இருமடங்கு தொகையை பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்ட விற்பனையில் ஈட்டியிருக்கும் என திரைத் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர். காரணம், டிக்கெட் விலை அதிகபடம் ரூ 100 முதல் 1000 வரை நகரத்துக்கேற்ப மாறுபடுகிறது. அதே நேரம் ஒரு பாப்கார்ன் விலை குறைந்தது 130 ல் தொடங்கி ரூ 300 வரை. பெங்களூர் போன்ற நகரங்களில் இன்னும் அதிகம். குளிர்பான விலை ரூ 90ல் தொடங்கி 160 வரை. தண்ணீர் பாட்டில் ரூ 40- 60. இதர தின் பண்டங்கள் விலை குறைந்தது ரூ 40-ல்தான் தொடங்குகிறது.


எனவே டிக்கெட் விற்பனையில் சம்பாதித்ததை விட இரு மடங்கு தின்பண்டங்களை விற்றே பாகுபலி தியேட்டர்கள் சம்பாதித்துவிட்டன என்கிறார்கள்.

English summary
Box Office sources say that mega hit Baahubali 2 screened thaters have collected more than Rs 1000 crs in Popcorn sales.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil