»   »  பாகுபலி... ரூ.500 கோடியைத் தொட்டு விட்டதாம்!

பாகுபலி... ரூ.500 கோடியைத் தொட்டு விட்டதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதன்முதலாக ஒரு தென்னிந்தியப் படம் வசூலில் 500 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்திப் படங்களே 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில் முதல் தடவையாக ஒரு தென்னிந்தியப் படம் இந்த சாதனையைப் படைத்து இருக்கிறது.

கடந்த ஜூலை 10 ம் தேதி வெளியான பாகுபலி திரைப்படம் சரியாக வெளிவந்த 24 நாளில் 500 கோடியை உலகமெங்கும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் பெரிய அளவில் நட்சத்திரங்கள் இல்லாத நிலையிலும் கூட படம் வசூலில் வரலாறு படைத்து இருக்கிறது.

போர்ப்ஸ் பத்திரிக்கை புகழாரம்

போர்ப்ஸ் பத்திரிக்கை புகழாரம்

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் வெளியாகி 4 வாரத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது, இந்தி அல்லாத ஒரு தென்னிந்தியத் திரைப்படம் 500 கோடியை வசூலித்து இருப்பது இதுவே முதல்முறை என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பாகுபலிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இந்தியில் மட்டும் 100 கோடி

தமிழில் 50 கோடி, கன்னடத்தில் 50 கோடி என்று 2 மொழிகளிலும் 100 கோடிகளை அள்ளிய பாகுபலி இந்தியையும் விட்டு வைக்கவில்லை, இந்தியில் இருந்து ஒரு நடிகர் கூட நடிக்காத நிலையிலும் படம் இந்தியிலும் சுளையாக 100 கோடியை அள்ளி இருக்கிறது.

24 நாட்களில் 500 கோடி

24 நாட்களில் 500 கோடி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிய பாகுபலி திரைப்படம் வெறும் 24 நாட்களில் 500 கோடியைத் தாண்டி வரலாறு படைத்தது இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி

தமிழில் சுமார் 50 கோடி, கன்னடத்தில் 50 கோடி, தெலுங்கில் 100 கோடி ஹிந்தியில் 100 கோடி என்று சுமார் 300 கோடிகளுக்கும் அதிகமாக இந்தியாவில் மட்டுமே வசூல் செய்திருக்கிறது பாகுபலி.

500 கோடியைக் கடந்த 4 வது படம்

500 கோடியைக் கடந்த 4 வது படம்

இந்திய அளவில் 500 கோடியைக் கடந்த 4 வது படம் என்ற பெருமையை பாகுபலி பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு பீகே, தூம் 3 மற்றும் பஜ்ரங்கி பைஜான் ஆகிய படங்கள் இந்த சாதனையைப் படைத்து உள்ளன.

தென்னிந்திய சினிமாவின் பெருமையாக மாறியிருக்கிறது பாகுபலி....வாழ்த்துக்கள் ராஜமௌலி சார்...

English summary
"Baahubali - the Beginning" is estimated to have collected approximately Rs 502 crore gross from all the four versions at the worldwide box office in 24 days.
Please Wait while comments are loading...