»   »  பாகுபலி டைரக்டர் பாராட்டும் காதல் கதை எது தெரியுமா?

பாகுபலி டைரக்டர் பாராட்டும் காதல் கதை எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அறிமுக இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான படம் 'அர்ஜுன் ரெட்டி'.

வழக்கமான தெலுங்கு சினிமாவின் மசாலா ஆக்‌ஷன் படமாக இல்லாமல் அழகான காதலை மையப்படுத்தியிருக்கும் 'அர்ஜுன் ரெட்டி' பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, வெளியான அனைத்து இடங்களிலும் வசூலையும் குவித்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் பாராட்டிப் புகழந்து வருகிறார்கள்.

வசூல் மழை :

குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் செமையாக வசூலைக் குவித்து வரும், இப்படம் அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

ராஜமௌலி பாராட்டு :

இப்படம் குறித்து இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 'இப்போதுதான் 'அர்ஜுன் ரெட்டி' படம் பார்த்தேன். காதல் கதைகள் எனக்கு ஏற்றவை அல்ல என்றாலும் படத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு அட்டகாசம். படத்தில் அவர் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஷாலினி, நண்பர்களாக நடித்தவர்கள் என அனைவரும் சிறப்பாக, இயல்பாக நடித்திருந்தார்கள்.

வசனங்கள் தெறி :

நல்ல பின்னணி இசை மற்றும் அழகான ஒளிப்பதிவு, அற்புதமாக எழுதப்பட்ட வசனங்கள். இந்தக் குழுவை அற்புதமாக கையாண்ட இயக்குநர் சந்தீப் வாங்காவுக்கு அனைத்து பாராட்டுகளும் போய்ச் சேரவேண்டும். இந்த மிகப்பெரிய வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.' எனத் தெரிவித்திருக்கிறார் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி.

ஆங்கில சப்டைட்டில் :

ஆங்கில சப்டைட்டில் :

தெலுங்கு புரியாதவர்கள் பார்ப்பதற்காக 'அர்ஜுன் ரெட்டி' படம் புதன் மற்றும் வியாழன் நாட்களில் ஆங்கில சப்டைட்டில்களோடு வெளியாகும் என சத்யம் சினிமாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Baahubali director S.S Rajamouli appreciates 'Arjun Reddy', which was released on August 25th starring Vijay Devarakonda and Shalini Pandey. B

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil