»   »  'மகிழ்மதி' போல உருவாகும் ஆந்திர தலைநகர் - ஐடியா கொடுக்கும் 'பாகுபலி' ஆர்க்கிடெக்ட்!

'மகிழ்மதி' போல உருவாகும் ஆந்திர தலைநகர் - ஐடியா கொடுக்கும் 'பாகுபலி' ஆர்க்கிடெக்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம், தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

தற்போது இரண்டு மாநிலங்களின் தலைநகராக ஐதராபாத் உள்ளது. பத்து வருடங்களுக்குப் பிறகு ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக மட்டுமே செயல்படும்.

ஆந்திராவின் தலைநகராக பத்து ஆண்டுகள் கழித்து செயல்பட அமராவதி நகரம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நகரைப் புதிதாக நிர்மாணிப்பதற்கு சுமார் ரூ. 58,000 கோடி செலவிடப்பட உள்ளது.

அமராவதி நகர டிசைன் :

அமராவதி நகர டிசைன் :

அமராவதி நகர நிர்மாணத்திற்காக லண்டனைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நகர டிசைனை உருவாக்கி வருகிறார். ஆனால், அந்த டிசைனில் சில மாற்றங்களைச் செய்ய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார்.

ராஜமௌலியிடம் ஐடியா :

ராஜமௌலியிடம் ஐடியா :

அந்த டிசைன் எப்படி வரலாம் என்பதற்கான மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை லண்டனுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

 மகிழ்மதி நகரம் போல :

மகிழ்மதி நகரம் போல :

அனைத்து வசதிகளும் உள்ள எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அந்த நகரம் உருவாக உள்ளது. 'பாகுபலி' படத்தில் மகிழ்மதி பேரரசை ராஜமௌலி கற்பனையாக பிரமாண்டமாக உருவாக்கியதைப் பார்த்தே சந்திரபாபு நாயுடு அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்.

செலவுகளை அரசே ஏற்கும் :

செலவுகளை அரசே ஏற்கும் :

இதற்காக லண்டன் செல்லும் ராஜமௌலியின் மொத்த செலவையும் ஆந்திர அரசே ஏற்க உள்ளதாம். தன்னுடைய இந்தப் பணிக்காக ராஜமௌலி எந்தவிதமான கட்டணத்தையும் அரசிடம் கேட்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூர் என்ற ஊர் தான் ராஜமௌலியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amaravati was chosen as the capital of Andhra Pradesh. About Rs. 58,000 crore will be spent on the construction of the city.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil