»   »  ரஜினி, அஜீத், சூர்யா.. ராஜமெளலியின் விருப்ப பட்டியல்.. அப்ப விஜய்??

ரஜினி, அஜீத், சூர்யா.. ராஜமெளலியின் விருப்ப பட்டியல்.. அப்ப விஜய்??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் ரஜினி, அஜீத், சூர்யா போன்றோரை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், பாகுபலி தமிழ் பதிப்பின் டிரைலர் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் தமிழில் எந்த நடிகரை இயக்க ஆசை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ராஜமௌலி அளித்த பதில் பின்வருமாறு :-

பர்ஸ்ட் ரஜினி தான்...

பர்ஸ்ட் ரஜினி தான்...

"எந்த இயக்குநரைக் கேட்டாலும் முதலில் ரஜினி சார் பெயரைத் தான் சொல்லுவார்கள். எனக்கு ரஜினி சாரை இயக்கும் ஆசை இருக்கிறது.

அஜீத்தும், சூர்யாவும்...

அஜீத்தும், சூர்யாவும்...

எனக்கு சூர்யா சாரும் நெருக்கமான நண்பர். இரண்டு முறை அஜித் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அஜித் ஒரு நல்ல மனிதர்.

ஆசை...

ஆசை...

இவர்கள் அனைவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

கதை தான் முக்கியம்...

கதை தான் முக்கியம்...

கதை தான் மிகவும் முக்கியம். அவர்களிடம் சென்று இந்த மாதிரியான கதை பண்ணலாமா என்று தான் கேட்க வேண்டுமே தவிர, நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாமா என்று கேட்கக் கூடாது" என இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அப்ப விஜய் சார்.. வேண்டாமா சார்?

அப்ப விஜய் சார்.. வேண்டாமா சார்?

எல்லாம் சரி மெளலி சார்.. இளைய தளபதி என்று ரசிகர்களால் போற்றப்படும் விஜய் குறித்து ஒரு வார்த்தை இல்லை, அரை வார்த்தை கூட சொல்லலையே சார்.. ஏன் சார்??

English summary
Clearing the air about his straight Tamil film in the process, the Naan Ee director Rajamouli said his obvious and first choice of hero while directing a Tamil movie would be none other than Superstar Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil