»   »  "பாகுபலி தப்பு.. பாகுபலி தப்பு"... இப்படிக்கு... அதன் ஒளிப்பதிவாளர்!

"பாகுபலி தப்பு.. பாகுபலி தப்பு"... இப்படிக்கு... அதன் ஒளிப்பதிவாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி முதல் பாகத்தில் பல காட்சிகள் செயற்கையாக, பல்வேறு தவறுகளுடன் உள்ளதாகவும், அவை நிச்சயம் இரண்டாம் பாகத்தில் சரி செய்யப்படும் என்றும் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. வசூலில் பெரும் சாதனை புரிந்த இப்படத்தின் இரண்டாம் அடுத்தாண்டு ரிலீசாக உள்ளது.


முதல் பாகத்திலேயே பிரமாண்டமான காட்சிகளால் மிரட்டியிருந்தார்கள். எனவே, இரண்டாம் பாகத்தை மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


செயற்கையான காட்சிகள்...

செயற்கையான காட்சிகள்...

இந்நிலையில், பாகுபலி முதல் பாகத்தில் பல காட்சிகள் செயற்கையாக, அவை கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என அப்பட்டமாகத் தெரிந்ததாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


திருப்தியில்லை...

திருப்தியில்லை...

மேலும், ஒரு ஒளிப்பதிவாளராக தனக்கு இப்படம் திருப்திகரமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். காரணம் பல காட்சிகளில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறதாம்.


சரி செய்யப்படும்...

சரி செய்யப்படும்...

ஆனால், இந்தத் தவறுகளை நிச்சயமாக பாகுபலி இரண்டாம் பாகத்தில் சரி செய்ய முயற்சிப்போம் என்றும் செந்தில் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஈகா..

ஈகா..

ஏற்கனவே, மகதீரா, அருந்ததி, ஈகா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் தான் செந்தில். பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஷாரூக், கஜோல் சேர்ந்து நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் தில்வாலே படத்திலும் பாடல் ஒன்றை இவர் படமாக்கியுள்ளார்.


சவால்...

சவால்...

அதோடு, ‘பாகுபலியின் முதல் பாகம் இந்தளவிற்கு வெற்றி பெறும் என நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இதனால், இரண்டாம் பாகத்தை மேலும் சிறப்பாகத் தர வேண்டிய சவால் உள்ளது.


முக்கிய நிகழ்வுகள்...

முக்கிய நிகழ்வுகள்...

காரணம், முதல் பாகம் வெறும் அறிமுகம் மட்டுமே. இரண்டாம் பாகத்தில் தான் கதையின் முக்கிய நிகழ்வுகள் உள்ளன' என செந்தில் தெரிவித்துள்ளார்.


English summary
Baahubali: The Beginning may have become a huge box office success and earned praises for the use of VFX, but its cinematographer K K Senthil Kumar said that he was disappointed with the CGI errors which made many scenes look fake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil