twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரனை நெருங்கும் பாகுபலி... ஏழு நாட்களில் 72 கோடி வசூல்!

    By Shankar
    |

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைத்திருந்த ரசிகர்கள் தேச பக்தியோடு இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். தேசப் பக்தியைக் கடந்து கிரிக்கெட்டை நேசிக்கும் பார்வையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டத் திறனை ஆமோதிக்க அரங்கம் கரகோசத்தில் அதிர்கிறது. வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா வீரர்களுடன் கிரவுண்டை சுற்றி வந்து ஆதரவு தந்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது பாகிஸ்தான் மக்களே எதிர்பாராதது. கிரிக்கெட்டை நேசித்தவர்கள் பாகிஸ்தான் அணியை ஆதரித்தது போன்ற நிகழ்வுதான் உலகம் முழுவதும் பாகுபலி படத்திற்கான ஆதரவும் - வசூல் மழையும். நேர்த்தியான, உணர்வுகளோடு ஒன்றக் கூடிய சினிமாவை எதிர் பார்க்கும் மக்களை படைப்பு ரீதியாக பாகு பலி ஏமாற்றவில்லை.

    ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்தின் படம் தான் தமிழகத்தில் 75 கோடி வருவாய் ஈட்டிய முதல் படம். இந்த சாதனையை அடுத்து வந்த தமிழ் படங்கள் எதுவும் முறியடிக்கவில்லை. இந்த சாதனையை இன்னும் சில தினங்களில் சமன் செய்யப் போகிறது பாகுபலி. இந்தியா முழுவதும் பாகுபலி நிகழ்த்தி வரும் வசூல் சாதனைகளை தினம்தோறும் அந்தந்த மொழி விநியோகஸ்தர்களும் பெருமையோடு பொது வெளியில் அறிவித்து வருகிறார்கள்.

    Baahubali first week collection in Tamil Nadu

    தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் எப்போதும் வெளிப்படைத் தன்மை இன்றி மெளனம் காப்பது தொடர்கிறது. தனி நபர் விஷயங்களைக் கூட பொது வெளியில் பகிரக் கூடிய திரையுலகம், வசூல் தகவல்களை மட்டும் கவனமாக தவிர்க்கக் காரணம், இங்கு வசூல் கணக்குகளில் நேர்மை இல்லை என்பதுதான் என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் விமர்சகர் இராமானுஜம்.

    தமிழ்நாட்டில் பாகுபலி திரையிட்ட நகர்புற மற்றும் மல்டி பிளக்ஸ், மால் தியேட்டர்கள் அனைத்திலும் இரண்டு வாரங்களுக்கு டிக்கட் விற்பனை ஆகி விட்டது. புறநகர் பகுதி தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சியும் சராசரி 300முதல் 600 பேர் படம் பார்க்கின்றனர். ஆனால் பாகுபலி படம் வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர்.

    சென்னை, மற்றும் செங்கல்பட்டு விநியோக பகுதி, மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ், மால் தியேட்டர்களில் மட்டுமே நேர்மையான கணக்குகள் கடைப்பிடிக்கபடுகின்றன. பிற தியேட்டர்களில் எங்கும் நேர்மையான கணக்குகள் கடைப்பிடிக்கபடவில்லை. தியேட்டர் மேனேஜர், படப் பிரதிநிதி, குத்தகைதாரர், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று அவரவர் தகுதிக்கு ஏற்ப தவறுகள் செய்கின்றனர் என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

    முதல் வாரம் தமிழ்நாடு மொத்த வசூல் 72 கோடி என்பதே ஒரிஜினல் வசூல். ஆனால் இது திட்டமிட்டு குறைவாகக் கூறப்பட்டு வருகிறது. வசூல் மழையில் முதல் மூன்று இடங்களில் செங்கல்பட்டு, மதுரை, சென்னை நகர விநியோகப் பகுதிகள் இடம் பிடித்துள்ளன. 62 தியேட்டர்களில் மட்டுமே கோவை பகுதியில் ரிலீஸ் செய்யப்பட்டதாலும், டிக்கட் கட்டணம் குறைவு என்பதாலும் வசூல் குறைவானதால் முதல் மூன்று இடங்களில் வர வேண்டிய கோவை ஏரியா இடம் பெறவில்லை.

    எந்திரன் படத்திற்கு முதலில் 55 கோடி என வருவாய் காட்டப்பட்டது, சில அதிரடி நடவடிக்கைக்கு பின் உண்மையான வருமானம் 75 கோடி என உறுதிப் படுத்தபட்டது (பின்னாளில் 121 கோடி என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் செபியில் அளித்த கணக்கில் குறிப்பிடப்பட்டது). அதே போன்ற நடவடிக்கைகள் பாகுபலிக்கும் எடுக்கப்படலாம் என்பதே சினிமா வட்டார பேச்சு.

    பாகு பலி முதல் வாரத்தின் முடிவில் 72 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் கணக்கின் போக்கில் பாகுபலி மே இறுதி வரை தமிழ்நாடு தியேட்டர்களில் ஓடும். அதன்மூலம் 150 கோடி வரை வசூலைப் பெறும் என்கிறார் வசூல் விபரங்களை கண்காணித்து வரும் விநியோகஸ்தர்.

    பாகுபலி வசூலில் நடைபெறும் உள்குத்து, மோசடிகள் பற்றி நாளை முதல் ஏரியாவாரியாக.

    - ஏகலைவன்

    English summary
    Box office sources say that Bahubali 2 has collected Rs 72 crores all over Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X