»   »  பாகுபலிக்கு சிவகாமியை பிடிக்கும், சிவகாமிக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

பாகுபலிக்கு சிவகாமியை பிடிக்கும், சிவகாமிக்கு யாரை பிடிக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலிக்கு ராஜமாதா சிவகாமியை பிடிக்கும். சிவகாமிக்கு(ரம்யா கிருஷ்ணன்) சோ அங்கிள், அம்மா ஜெயலலிதாவை பிடிக்கும்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 792 கோடி வசூல் செய்துள்ளது. படத்தில் ராஜ மாதாவாக நடிப்பில் மிரட்டியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

13 வயதில் நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் இன்றும் பிசியான நடிகையாக உள்ளார். காரணம் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது தான்.

சோ

சோ

ரம்யா கிருஷ்ணன் மறைந்த நடிகர், அரசியல் விமர்சகர் சோ ராமசாமியின் உறவினர். சோ அங்கிளும், அம்மா ஜெயலலிதாவும் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று ரம்யா தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

தனது இன்ஸ்பிரேஷனான சோ அங்கிள் மற்றும் அம்மா ஜெயலலிதா அடுத்தடுத்து இறந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக ரம்யா கூறியிருந்தார். சோ அங்கிள் தான் எங்கள் குடும்பத்தின் தூண் போன்றவர் என்றார் ரம்யா.

பிடிக்கும்

பிடிக்கும்

எனக்கு சோ அங்கிள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் பேச்சு, அவரை பற்றிய அனைத்தும் பிடிக்கும். அவர் மழுப்பி பேச மாட்டார், மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்துவிடுவார் என்று ரம்யா கூறினார்.

பயம்

பயம்

எனக்கு சோ அங்கிளை பிடிக்கும் அதே சமயம் அவரை பார்த்தால் பயப்படவும் செய்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அங்கிளை பார்க்க செல்வேன். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார் என்றார் ரம்யா.

English summary
Ramya Krishnan who has done justice to god mother Sivakami character in Baahubali 2 once said that her uncle Cho and Amma Jayalalithaa are her inspirations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil