»   »  பாகுபலி.. சினிமா பிரபலங்கள் "ஆஹாஹா ஓஹோஹோ" பாராட்டு!

பாகுபலி.. சினிமா பிரபலங்கள் "ஆஹாஹா ஓஹோஹோ" பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி, திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றிக்கொடியை நாட்டி வரும் திரைப்படமாக மாறியிருக்கிறது பாகுபலி. வெறும் 3 நாட்களில் 160 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.

தெலுங்கு தவிர்த்து மற்ற மொழிகளில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்காத போதும் கூட தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிவருகிறது படம்.


படத்தின் மொத்த பட்ஜெட்டான 250 கோடியில் கிட்டத்தட்ட 90% இப்பொழுதே வசூலித்து இருக்கிறது பாகுபலி, வேறு எந்த இந்தியப் படங்களும் செய்யாத சாதனை இது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தை எல்லா மொழிகளில் உள்ள நட்சத்திரங்களும் பார்த்து ரசித்து உள்ளனர்.


படத்தைப் பற்றிய அவர்களின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.


பாகுபலி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்- வருண் தவான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான வருண் தவான் பாகுபலி தென்னிந்தியாவில் மட்டும் சாதனை செய்யவில்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு படம் நடித்த அனைவரும், ஒவ்வொரு காட்சியிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்திருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளார்.


வருண் சொன்னது சரியே- விவேக் ஓபராய்

மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் "வருண் சொன்னதை நான் ஒத்துக் கொள்கிறேன், படம் மிகவும் நன்றாக இருக்கிறது. பாகுபலி படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்" என்று வாழ்த்தியிருக்கிறார்.


100 முறை பார்க்கலாம் – மஹத்

தெலுங்கு நடிகர் மஹத் பாகுபலி 100 நாட்களைத் தொடுமா என்பது தெரியவில்லை ஆனால் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் 100 முறை இந்தப் படத்தைப் பார்க்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


பாகுபலி 2 ம் பாகத்திற்கு காத்திருக்க முடியாது – சித்தார்த்

இந்திய சினிமா மற்றும் தெலுங்கு சினிமாக்களில் இதேபோல ஏகப்பட்ட புதையல்கள் இருக்கின்றன, அடுத்த தலைமுறைகளில் அவை ஜொலிப்பதற்கு ஒரு வாய்ப்பை பாகுபலி ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இரண்டாம் பாகத்திற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.


வார்த்தைகள் இல்லை- தயா அழகிரி

எஸ்.எஸ்.ராஜமௌலி சார் பாகுபலி படத்தைப் புகழ வார்த்தைகளே இல்லை, உறுதியான உழைப்பினால் கிடைத்திருக்கும் வெற்றி இது. என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாநிதி அழகிரி.


தெலுங்கு தேசத்தை உயர்த்தி விட்டீர்கள் – அல்லு அர்ஜுன்

டார்லிங் பிரபாஸ் மற்றும் எனது நெருங்கிய நண்பன் ராணா இருவருக்கும் என்னுடைய இதயத்தில் இருந்து, இந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் இது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய உயரமாக இருக்கும் மேலும் இயக்குநர் ராஜமௌலி சாருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் தெலுங்கு சினிமாவின் உயரத்தை அதிகரித்து இருக்கிறீர்கள் என்று அல்லு அர்ஜுன் பாராட்டி இருக்கிறார்.


அற்புதமான காவியம் – நாகர்ஜுனா

ராஜமௌலி குழுவினர் இணைந்து ஒரு அற்புதமான காவியத்தைப் படைத்தது இருக்கிறீர்கள், பிரமாண்டமான வெற்றியை நீங்கள் பெற்றிட எனது வாழ்த்துக்கள் என்று தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு காட்சியும் அருமை- தனுஷ்

ராஜமௌலி சார் ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது, உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று தனுஷ் பராட்டியிருக்கிறார்.


இந்திய சினிமாவின் அடுத்த கட்டம் – சிவகார்த்திகேயன்

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் ராஜமௌலி சார், ஒரு புதுமையான அனுபவத்தை இந்தப் படத்தின் மூலம் கொடுத்ததற்கு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியிருக்கிறார்.


English summary
Baahubali Movie Celebrities Comments In Twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil