»   »  பரபரப்பைக் கிளப்பும் பாகுபலி.. கன்னடத்து 'மயூரா'வின் அட்டக் காப்பியாமே?

பரபரப்பைக் கிளப்பும் பாகுபலி.. கன்னடத்து 'மயூரா'வின் அட்டக் காப்பியாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகுபலி திரைப்படம், மயூரா என்ற கன்னடப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று உலா வர ஆரம்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் நடித்த மயூரா படத்தைப் போலவே பாகுபலி படத்தின் கதையும், அமைந்து இருப்பதாக இரு படங்களின் கதையையும் கம்பேர் செய்து சொல்லி இருக்கின்றனர்.

ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்களை மற்றப் படங்களுடன் கம்பேர் செய்து ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட புண்ணியவான்கள், தற்போது அடுத்த கட்டமாக கதையிலும் கையை வைத்து இருக்கின்றனர்.

படம் வெளியான பின்பு என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை, அதற்கு முன்பு பாகுபலி படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்...

2 வேடங்களில் பிரபாஸ்

2 வேடங்களில் பிரபாஸ்

பாகுபலியில் அப்பா மற்றும் மகன் என 2 வேடங்களில் நடித்திருக்கிறார் பிரபாஸ். அப்பா பிரபாஸ்க்கு அனுஷ்கா ஜோடி, மகன் பிரபாஸ்க்கு தமன்னா ஜோடி.

பாகுபலியின் கதை என்ன

பாகுபலியின் கதை என்ன

அமரேந்திர பாகுபலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா இருவரும் சந்தோஷமாக நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். பாகுபலியின் அமைச்சராக விளங்கும் நாசர் அடுத்த நாட்டு மன்னனான ராணாவுடன் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார். சதித்திட்டத்தின் முடிவில் ராணா பாகுபலி நாட்டின் மீது படையெடுத்து வந்து பாகுபலியைக் கொன்று அவரது நாட்டை அடிமைப்படுத்தி விடுகிறார்.

வாரிசை அழிக்கத் துடிக்கும் ராணா

வாரிசை அழிக்கத் துடிக்கும் ராணா

அனுஷ்காவையும் அவரது மகனையும் கைது செய்யச் சொல்லி ராணா உத்தரவிட, தீய ராணுவம் அனுஷ்காவைக் கைது செய்கிறது. கடலுக்குப் பக்கத்தில் இருந்ததால் அமரேந்திர பாகுபலியின் மகனான இளைய பாகுபலி தப்பித்து விடுகிறான்.

பழங்குடியினரிடம் வளரும் சிவடு

பழங்குடியினரிடம் வளரும் சிவடு

தப்பிச் சென்ற பாகுபலி ஒரு தீவிற்குச் செல்ல அங்கிருந்த பழங்குடிகள் அவனை எடுத்து சிவடு எனப் பெயரிட்டு வளர்க்கின்றனர்.

சிவடுவிடம் காதல் வசப்படும் தமன்னா

சிவடுவிடம் காதல் வசப்படும் தமன்னா

ராணாவின் மகளான அவந்திகா (தமன்னா) ஒரு நாள் பழங்குடிகள் வசிக்கும் தீவிற்குச் சென்று சுற்றிப் பார்க்கும் போது சிவடுவைச் (பிரபாஸ்) சந்திக்கிறார். இருவரும் காதல் வயப்படுகின்றனர், இந்நிலையில் அவந்திகா சிவடுவை தனது நாட்டிற்கு கூட்டிச் செல்கிறார்.

பழசை மறக்காத சிவடு

பழசை மறக்காத சிவடு

தமன்னாவின் நாட்டிற்குச் செல்லும் பொழுது அங்கு சிவடுவுக்கு தனது கடந்த காலம் தெரிய வருகிறது, தனது அப்பாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை அழித்து தனது நாட்டை மீட்கத் துடிக்கிறான். தனது கடந்த காலம் பற்றி காதலி அவந்திகாவிடமும் தெரிவிக்கிறான்.

போரில் வெற்றி பெற்றானா பாகுபலி?

போரில் வெற்றி பெற்றானா பாகுபலி?

பழங்குடியினரைப் பயன்படுத்தி தனது நாட்டையும், காதலியையும் மீட்கும் முயற்சியில் இளைய பாகுபலி வென்றானா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

கன்னட மயூரா

கன்னட மயூரா

படத்தின் கதையானது கன்னடத்தில் வெளியான மயூரா படத்தின் கதை போன்றே உள்ளதாம், தேவுடு நரசிம்ம சாஸ்திரியின் மயூரா திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், மஞ்சுளா, ஸ்ரீநாத் மற்றும் வஜ்ரவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

English summary
‘Baahubali’ Movie Inspired by Kannada Classic 'Mayura'? The version doing the rounds on social media is accusatory, saying the movie has been inspired by Kannada classic "Mayura" starring late Rajkumar.
Please Wait while comments are loading...