twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா!

    |

    Recommended Video

    Bhahubali Royal Reunion in London

    லண்டன்: உலகப் புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டிருப்பது இந்திய சினிமாவுக்கே கிடைத்த பெருமை என கூறப்படுகிறது.

    லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ராயல் ஆல்பர்ட் ஹால் கட்டப்பட்டு 148 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அங்கு ஆங்கிலம் அல்லாத எந்த படமும் ஒளிபரப்பப்பட்டதில்லை.

    இந்நிலையில் அந்த ஹாலில் முதல் முறையாக இங்கிலிஷ் அல்லாத ஒரு படமாக பாகுபலி தி பிகினிங் படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் படக்குழுவினரும் பங்கேற்றனர்.

    லண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி!லண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி!

    ராயல் ஆல்பர்ட் ஹால்

    ராயல் ஆல்பர்ட் ஹால்

    இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தாயாரிப்பாளர் ஷோபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ராயல் ஆல்பர்ட் ஹால் லண்டனின் சவும் கென்சின்டனில் உள்ளது.

    பொக்கிஷம்

    பொக்கிஷம்

    லண்டனின் பொக்கிஷங்களில் ராயல் ஆல்பர்ட் ஹாலும் ஒன்று. இது பொதுமக்களின் நிதியை பெற்றோ அல்லது அரசு நிதி உதவியிலோ நடத்தப்படவில்லை. இந்த ஹால் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

    விக்டோரியா மகாராணி

    விக்டோரியா மகாராணி

    இந்த ஹாலில் ஒரே நேரத்தில் 5267 பேர் அமர முடியும். ராயல் ஆல்பர்ட் ஹால், 1871ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியால் திறக்கப்பட்டது.

    பிரிட்டிஷ் கலாச்சாரம்

    பிரிட்டிஷ் கலாச்சாரம்

    இந்த ஹால் திறக்கப்பட்ட நாள் முதல் உலகின் முன்னணி கலைஞர்கள் இந்த ஹாலில் ஏராளமான பர்ஃபாமன்ஸ்களை செய்து வருகின்றனர். ராயல் ஆல்பர்ட் ஹால் பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளுக்கான இடம் ஆகும். குறிப்பாக 1941 முதல் ஒவ்வொரு கோடைகாலத்திலும் இங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    வருஷத்துக்கு 390 நிகழ்ச்சிகள்

    வருஷத்துக்கு 390 நிகழ்ச்சிகள்

    இந்த ஹாலின் மெயின் ஆடிட்டோரியத்தில் ஆண்டுதோறும் கிளாசிக்கல், ராக் அன்ட் பாப் இசை நிகழ்ச்சிகள், பாலே, ஓபரா, படக்காட்சிகள், லைவ் கச்சேரிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் உட்பட 390 நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    வில்லேஜ் ஹால்

    வில்லேஜ் ஹால்

    ஆடிட்டோரியம் அல்லாத மற்ற இடங்களில் ஆண்டுக்கு 400 நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹால் நாட்டின் வில்லேஜ் ஹால் என்றும் அழைக்கப்படுகிறது.

    டென்னிஸ்

    டென்னிஸ்

    ராயல் ஆல்பர்ட் ஹாலில் முதன் முறையாக 1871 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஆர்தூர் சல்லிவான்ஸ் கேன்டன்டா ஷோர் அன்ட் சீ இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டென்னிஸ் முதல் முறையாக 1970ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஹாலில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பாகுபலி படம்

    பாகுபலி படம்

    இத்தனை சிறப்புமிக்க இந்த ஹாலில்தான் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபாலி திரைப்படம் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Royal Alber hall opening by Queen Victoria in 1871 in London. In this hall 5267 peaple can sit at a time. One of the Icon of London The Royal albert has played Baahubali the bigining movie for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X