twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாகுபாலியில் அப்படி என்ன இருக்கிறது?

    By Manjula
    |

    ஹைதராபாத்: இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும்படம் பாகுபாலி. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கள் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது இந்தியாவில். பாகுபாலி படம் பற்றி

    எந்த விஷயம் வெளிவந்தாலும் அதனை வைரலாக்கி விட்டுதான் அடுத்த வேலையை பார்க்க செல்கிறார்கள் நெட்டிசென்கள்.

    பிரபல தெலுங்கு பட இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி படம் ஆரம்பிக்கும் போது இதுவும் ஒரு வரலாற்றுப் படம் என்ற அளவில் பார்த்தவர்கள் தற்போது அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் படம் எப்போது வெளிவரும் என்று நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    ஆந்திராவின் இளவரசன் என்று புகழப் படும் மகேஷ் பாபு தனது பட வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு பாகுபாலி ரிலிசை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இந்தப் படம் வெளியாகும் தேதியில் வேறு எந்தப் படம் வெளியீடும் இருக்காது என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

    அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்...

    தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள்

    தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள்

    இந்தப் படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட உலகைச் சேர்ந்த மிகப் பெரிய ஸ்டார்கள் கைகோர்த்து நடிக்கின்றனர். தமிழில் நாசர், சத்யராஜ்,ரம்யா கிருஷ்ணன் தெலுங்கில் அனுஷ்கா,தமன்னா,பிரபாஸ் மற்றும் ராணா கன்னடத்தில் இருந்து நடிகர் சுதீப் என் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிப்பதால் தென்னிந்திய மொழிகளில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது படத்திற்கு.

    எத்தனை மொழிகளில்

    எத்தனை மொழிகளில்

    தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும் படம் கன்னடம்,மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிடப் படுகிறது.மற்றும் ஏராளாமான மொழிகளிலும் டப் செய்யப் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் எவ்ளோ தெரியுமா

    பட்ஜெட் எவ்ளோ தெரியுமா

    100 கோடி என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் பின்பு அது 150 க்கு வந்து தற்போது 200 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    படத்தின் ஆடியோ உரிமை

    படத்தின் ஆடியோ உரிமை

    படத்தின் பாடல்களை சுமார் 3 கோடி ரூபாய் கொடுத்து லஹரி நிறுவனம் வாங்கி இருக்கிறார்கள். படத்தின் ஆடியோ ரிலிசை வெளியிட சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார்கள், அதைவிடவும் ஹைலைட்டான ஒரு விஷயம் இந்த நிகழ்ச்சியை லைவ்வாக ஒளிபரப்ப ஒரு பிரபல தொலைக் காட்சி நிறுவனம் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

    போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சை

    போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சை

    பாகுபாலி பட போஸ்டர்கள் வெளியீட்டிற்கு எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதைவிடவும் சர்ச்சை அதிகமாக இருந்தது நாயகன் பிரபாஸ் லிங்கத்தைத் தூக்கிக் கொண்டுவர இது தமிழ் திருவண்ணாமலை படத்தின் காப்பி என்றார்கள், தண்ணீருக்குள் இருந்து ஒரு கை நீண்டு குழந்தையை மேலே கொண்டுவருவது போன்று இருந்த படம் ஆங்கிலப் படத்தின் காப்பி என்று இரண்டையும் கம்பேர் செய்து சந்தோசப் பட்டுக் கொண்டார்கள் நெட்டிசென்கள்.

    தெலுங்கு உரிமை

    தெலுங்கு உரிமை

    பாகுபாலி படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமையை ரூபாய் 25 கோடி கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளது மா டிவி இதுவரை எந்த ஒரு தெலுங்கு படத்திற்கும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத தொகை இது.

    படத்தின் டிரைலர்

    படத்தின் டிரைலர்

    மே 31 அன்று 125 வினாடிகள் ஓடக் கூடிய டிரைலர் வெளியாகிறது, சென்சாரில் அனுமதி வாங்கி விட்டதால் கண்டிப்பாக அன்று வெளியாகும் என்கிறார்கள்.

    மூன்று தேசிய விருது

    மூன்று தேசிய விருது

    இந்தப் படத்தில் மூன்று தேசிய விருதை வாங்கியவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறார்கள். படத்தின் இயக்குனர் ராஜமௌலி (படம் நான் ஈ) ஆர்ட்டை வடிவமைக்கும் சாபு சிரில் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ்க்காக தேசிய விருது வென்ற ஸ்ரீநிவாஸ் மோகன் ஆகியோர் தான் அந்த மூவர்.

    படம் மொத்தம் 4 மணி நேரம் 40 நிமிடங்கள்

    படம் மொத்தம் 4 மணி நேரம் 40 நிமிடங்கள்

    படம் மொத்தம் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுமாம் பயந்து விடாதீர்கள் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்கள். இரண்டு பாகங்களில் முதல் பாகம் 2மணி நேரமும் இரண்டாவது பாகம் 2 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் என்றஅளவில் இருக்குமாம்.

    படத்தை எப்போது காணலாம்

    படத்தை எப்போது காணலாம்

    ஜூலை மாதம் 10 ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு இசை எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவு செந்தில்குமார், எடிட்டிங் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆர்கா மீடியா வொர்க்ஸ்.

    சரித்திரப் படங்களுக்கு மக்களிடம் என்றுமே வரவேற்பு குறைவதில்லை...

    English summary
    Baahubali (English: The One With Strong Arms) is an upcoming two part indian epic film being simultaneously made in Telugu and Tamil languages directedby S.S. Rajamouli The film will be simultaneously dubbed into English, Hindi, French, Malayalam , and in several foreign languages. Baahubali features anensemble cast of Prabhas Varma, Rana Daggubati, Anushka Shetty and Tamannaah in the lead roles, and Ramya Krishnan, Sathyaraj, Nassar, Adivi Sesh,Tanikella Bharani and Sudeep in crucial roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X