»   »  பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னார்னு தெரிஞ்சுடுச்சு... ஆனா இந்த கேள்விக்கு பதில் எப்ப கிடைக்கும்?

பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னார்னு தெரிஞ்சுடுச்சு... ஆனா இந்த கேள்விக்கு பதில் எப்ப கிடைக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலியின் தொடர்ச்சியை நம்மை பார்க்க வைப்பதில் முக்கிய பங்கு ஒரு கேள்விக்கு உள்ளது. முதல் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்ற கேள்வியோடு படம் முடியும். இந்தக் கேள்வி தந்த சுவாரஸ்யமே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பாக மாறியது.

இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆன பின்பு இந்த கேள்விக்கு பதில் தெரிந்துவிட்டது. ஆனால் ஒரு கேள்வி புதிதாக முளைத்துள்ளது. அது பல்லாள தேவனின் மனைவி யார்? என்பது. முதல் பாகத்திலேயே பல்லாள தேவனுக்கு ஒரு மகன் இருப்பது போலவும் அவனை மகன் பாகுபலி கொல்வது போலவும் கதை இருந்தது. ஆனால் மனைவியைக் காட்டவில்லை. இரண்டாம் பாகத்திலும் பல்லாள தேவனின் மனைவியை காண்பிக்கவே இல்லை.


Baahubali raises another question

பல்லாள தேவனின் மனைவி யார்? அவள் என்ன ஆனாள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜமௌலியும் அவரது தந்தையும் பாகுபலி இனி தொடராது என்று அறிவித்து விட்டார்கள். ஆக, இந்தக் கேள்விக்கு பதில் தெரிய வாய்ப்பே இல்லையோ!

English summary
Once again Baahubali is raising a question that who is Ballala Thevan's wife.
Please Wait while comments are loading...