»   »  சீன பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யத் தயாராகும் பாகுபலி

சீன பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யத் தயாராகும் பாகுபலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய பாக்ஸ் ஆபீஸை துவைத்து எடுத்த பாகுபலி சீனாவிலும் ரிலீஸாக உள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் ரிலீஸான வேகத்தில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு தவிர இந்தியில் டப் செய்து வெளியான பாகுபலி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சாதனை படைத்து வருகிறது பாகுபாலி.

வசூல்

வசூல்

பாகுபலி படம் ரிலீஸான 2 நாட்களில் ரூ.100 கோடியும், 5 நாட்களில் ரூ.200 கோடியும், 8 நாட்களில் ரூ.300 கோடியும் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் பாகுபலி ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.

தூம்

தூம்

தூம்(ரூ.1.98 பில்லியன்), பி.கே.(ரூ.1. 75 பில்லியன்), ஹேப்பி நியூ இயர்(ரூ.1. 74 பில்லியன்) ஆகிய இந்தி படங்களை அடுத்து சர்வதேச அளவில் ரிலீஸான வேகத்தில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது பாகுபலி(ரூ.1. 62 பில்லியன்).

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கூறியுள்ளனர்.

சீனா

சீனா

பாகுபலி படம் சீனாவில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக சீனாவில் ரிலீஸான ஆமீர் கானின் பி.கே. படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் பாகுபலியும் சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Prabhas starrer Baahubali is set to hit the screens in China. Though the release date is yet to be announced, it is expected to be a huge hit in the neighbouring nation also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil