»   »  வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவிக்கும் பாகுபலி!

வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவிக்கும் பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலியின் வசூல் நாளுக்கு நாள் மிரட்டும் விதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இப்படம் பெரும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

Select City
Buy Baahubali 2: The Conclusion (Hindi) (U/A) Tickets

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள படம் பாகுபலி. பலத்த எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்தை விட அதிக வசூலைத் தந்து வருகிறது.


ரிலீசான இரண்டு நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூலைத் தந்தது இப்படம். இதன் மூலம் மிகவிரைவாக ரூ. 100 கோடியை வசூலித்த படம் என்ற பெருமை இதற்குக் கிடைத்தது.


இந்நிலையில், படம் ரிலீசாகி 5 நாட்களில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டிச் சென்று மற்றொரு புதிய சாதனையைப் புரிந்துள்ளது பாகுபலி. இந்த நிலைத் தொடர்ந்தால் வசூலில் மேலும் பல சாதனைகளை பாகுபலி நிகழ்த்திக் காட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.


உலகம் முழுவதும்...

உலகம் முழுவதும்...

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது இப்படம். இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் பாகுபலி சக்கைபோடு போட்டு வருகிறது.


தெலுங்கில்...

தெலுங்கில்...

அங்கு வெளியான தெலுங்கு பாகுபலி முதல் ஐந்து நாளில் மட்டும் 30 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதேபோல் தமிழ் பாகுபலி ரூ. 1.58 கோடி வசூல் செய்துள்ளது.


ஹிந்தியில்...

ஹிந்தியில்...

இதேபோல், ரிலீசான ஐந்து நாட்களில் ஹிந்தியில் ரூ. 35 கோடியை வசூலித்து நம்ப முடியாத வெற்றியைத் தந்துள்ளது இப்படம். இதற்கு முன்னர் வேறு எந்த தென்னிந்தியப் படமும் இந்தளவுக்கு ஹிந்தியில் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில் இப்படம் முதல் வாரத்தில் 31 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வசூலில் சாதனை புரிந்துள்ளது பாகுபலி.


கனடாவில்

கனடாவில்

கனடாவில் ரூ. 13.86 லட்ச ரூபாய் வசித்துள்ளது பாகுபலி. படம் ரிலீசாகி ஒரு வார காலமாகியும் தியேட்டர்கள் நிரம்பி வழிவதாக அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


தமிழகத்தில்

தமிழகத்தில்

தமிழகத்தில் மட்டும் ஐந்தாவது நாளில் பாகுபலி ரூ. 3.5 கோடியை வசூலித்துள்ளது. வேறு எந்தப் படங்களும் இந்தளவிற்கு வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்களில் அது ரூ. 20 கோடியை வசூலித்துள்ளது.


சென்னையில்

சென்னையில்

இதேபோல், சென்னையில் ஐந்தாவது நாளில் ரூ. 80 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. நாளை மறுதினம் தனுஷின் மாரி படம் வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து பாகுபலி வசூலில் சாதனை புரிந்து வருகிறது.


எந்திரன் வசூலை முறியடிக்கும்

எந்திரன் வசூலை முறியடிக்கும்

ரஜினிகாந்த்தின் எந்திரன் படம்தான் ரூ. 283 கோடியை வசூலித்து வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த சாதனையை மிக எளிதாக பாகுபலி முறியடிக்கிறது.


English summary
On course to become the highest grossing South Indian film ever, Baahubali is fast approaching the 200 crore mark on its 5th day at the box office with the Tamil version contributing handsomely.
Please Wait while comments are loading...