»   »  கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?...பதிலை இந்த வருஷமே சொல்லிடுவாங்களாம்!

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?...பதிலை இந்த வருஷமே சொல்லிடுவாங்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகுபலி 2 இந்த வருடக் கடைசியில் கண்டிப்பாக வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா கூறியிருக்கிறார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் 2 வது பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது கேரளா மாநிலம் கண்ணூர் காடுகளில் இயக்குநர் ராஜமௌலி பாகுபலி 2 படப்பிடிப்பினை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே 40% படம் பிடிக்கப்பட்டு விட்டதால் படம் இந்த வருடமே வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி

பாகுபலி

கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிவாகை சூடிய படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உட்பட ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் 600 கோடியை வசூலித்து இந்திய அளவில் அதிகளவு வசூல் சாதனை நிகழ்த்திய 3 வது படம் என்ற பெருமையை பாகுபலி பெற்றது.

கட்டப்பா ஏன்?

கட்டப்பா ஏன்?

முதல் பாகத்தில் கட்டப்பா மன்னன் அமரேந்திர பாகுபலியைக் கொல்வதோடு படத்தை முடித்திருந்தார் ராஜமௌலி. படம் வந்த சில மாதங்களுக்கு எங்கெங்கு திரும்பினும் இதே பேச்சாகவே இருந்தது. மேலும் ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பு செய்யும்போதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி ட்ரெண்டாக்கத் தவறுவதில்லை.

பாகுபலி 2

பாகுபலி 2

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கான விடை பாகுபலி 2வில் தான் தெரியவரும் என்பதால் உலகளவில் ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

15 நாட்கள்

15 நாட்கள்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கேரளா மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். இங்கு சில முக்கிய காட்சிகளை படம்பிடிக்க ராஜமௌலி திட்டமிட்டு இருக்கிறார்.

40% படப்பிடிப்பு

40% படப்பிடிப்பு

இந்தப் பாகத்தின் 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. 2 வது பாகத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 17 ம் தேதி ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது. 3 வாரங்கள் நடந்த இந்த படப்பிடிப்பில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் தொடர்பான சில முக்கியக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.

இந்த வருடமே

இந்த வருடமே

ஏற்கனவே பாதி படப்பிடிப்பை முடித்து விட்டதால் மொத்த படப்பிடிப்பையும் விரைவாக முடித்து படத்தை இந்த வருடமே வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்". என்று படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா தெரிவித்திருக்கிறார்.

இந்திய சினிமாவின்

இந்திய சினிமாவின்

பாகுபலி படமானது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸில் முதல் பாகம் பட்டையைக் கிளப்பியதால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். உலக ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. இந்த எதிர்பார்ப்பை ராஜமௌலி காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.

    English summary
    Baahubali 2 Producer Shobu Yarlagadda says in Recent Interview " At the end of the year(2016) this film must be Released".
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil