Baahubali: The Epic Box Office - பாகுபலி தி எபிக் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப்போடு போடுதே.. மவுசு குறையல

சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ண்ன், நாசர், ராணா என பலர் நடித்த பாகுபலி திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகின. இப்போது இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப்போடு போட ஆரம்பித்திருக்கிறது.

தென்னிந்திய மொழிகளிலிருந்து இப்போது பான் இந்தியா படங்கள் அதிகம் வர தொடங்கியிருக்கின்றன. அப்படி வெளியாகி சில படங்கள் வெற்றியடைகின்றன பல படங்கள் தோல்வியடைகின்றன. தமிழில் கூட அண்மையில் வெளியான கூலி பான் இந்தியா திரைப்படம்தான். ஆனால் பெரிய வெற்றியெல்லாம் பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்து ட்ரோலுக்குத்தான் உள்ளானது.

விதை போட்ட பாகுபலி: ஆனால் இப்போது வெளியாகும் பான் இந்தியா படங்களுக்கெல்லாம் விதை போட்டது என்றால் கடந்த 2015ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலிதான். ஆட்சி அதிகாரத்துக்கு போட்டிப்போடும் அண்ணன், தம்பி என வழக்கமான சரித்திர கால கதைதான். ஆனால் அதில் ராஜமௌலி செய்திருந்தது மேஜிக்கின் உச்சம். பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள், ஆயிரக்கணக்கான ஆர்ட்டிஸ்ட்டுகள், மிகச்சிறந்த திரைக்கதை என அற்புதம் நிகழ்த்தியிருந்தார்.

Baahubali The Epic Box Office Collection Rajamouli s Re-Release Earns 29 Crore Worldwide in 2 Days

பாகுபலி 2: அந்தப் படம்தான் தெலுங்கிலிருந்தும் வெளியாகும் திரைப்படம் மற்ற மொழி திரையுலக பாக்ஸ் ஆஃபிஸ்களை ஆட்சி செய்யும் என்பதை உணர்த்தியது. அப்படம் நூறு கோடி ரூபாய்வரை வசூலித்தது. அந்தப் படத்துக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக பாகுபலி 2வை இயக்கினார். முதல் பாகம்போலவே அத்தனை ஏரியாக்களிலும் மேஜிக் இயக்குநர் கூடுதலாக டெக்னிக்கல் ரீதியாக மிரட்டியிருந்தார். இந்தப் படமோ 100 கோடி ரூபாய் வசூலிலிருந்து 1000 கோடி ரூபாய் வசூல் என்ற நிலைக்கு சென்றது.

பிரமாண்ட இயக்குநர்: ராஜமௌலி இந்த இரண்டு படங்களில் எடுத்த பெயர்தான் பிரமாண்ட இயக்குநர். அதுவரை அந்தப் பட்டத்துக்கு சொந்தக்காரராக ஷங்கர் இருந்தார். இரண்டு பாகங்களும் அதை அடித்து துவைத்துவிட்டது. பாகுபலி கொடுத்த உற்சாகம் புஷ்பா, புஷ்பா 2, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, காந்தாரா, காந்தாரா 2 என வரிசையாக பான் இந்தியா மார்க்கெட்டை தென்னிந்திய சினிமாக்கள் ரூல் செய்வதற்கு வழி வகுத்தன.

பாகுபலி தி எபிக்: இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்ற பெயரில் படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாகம் முதல் பாதியாகவும், இரண்டாவது பாகம் இரண்டாவது பாதியாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அதன் பாக்ஸ் ஆஃபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எவ்வளவு வசூல்?: Sacnilk வெளியிட்டிருக்கும் தகவல்படி அந்தப் படம் இந்தியாவில் முதல் நாளில் 9.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளான நேற்று 7.1 கோடி ரூபாயும் வசூலித்து இரண்டு நாட்களில் மொத்தம் 18.6 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் இப்படம் மொத்தம் 29 கோடி ரூபாய்வரை அள்ளியிருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படமும் 100 கோடி ரூபாய் வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழவும் செய்திருக்கிற்து.

More from Filmibeat

Read more about: bahubali
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X